ஹரியாணாவின் குர்கோவான் நகரிலிருந்து காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து 15 வயதான சிறுமி 1,200 கி.மீ ஓட்டிச் சென்று 10 நாட்களில் சொந்த மாநிலமான பிஹாருக்கு வந்து பிரமி்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்தவாரம் மூழுவதும் சமூக வலைதளங்களில் இந்த சிறுமி தனது தந்தையை அமரவைத்து சொந்தமாநிலம் செல்வது டிரண்டிங் ஆகிய நிலையில், தற்போது இந்திய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பு லாக்டவுன் முடிந்தபின் பயிற்சிக்கு அழைத்துள்ளது
கரோனா வைராஸ் வந்த லாக்டவுனால் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்ேவறு துன்பங்களை அனுபவித்து கால்நடையாகவும், சைக்கிளிலும் சொந்த கிராமம் நோக்கி செல்லும் போது, இதுபோன்ற ஆறுதலான செய்திகளும், எதிர்காலம் தெரியாமல் மனதளவில் சோர்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கு உற்சாகத்தை இது அளிக்கும்.
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது ஜோதி குமாரி எனும் சிறுமிதான் 1200 கிமீ சைக்கிளில் தனது தந்தையை அமரவைத்து பயணித்தவர்
பிஹார் மாநிலம் தார்பங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவரின் 15 வயது மகள் ஜோதி குமார். மோகன் பாஸ்வான் கடந்த 20 ஆண்டுகளாக ஹரியாணா மாநிலம் குர்கவானில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த ஜனவரி 26-ம் தேதி மோகனுக்கு விபத்து ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார்.
இந்த செய்தி அறிந்த ஜோதி குமாரியும், அவரின்தாயும் பிஹாரிலிருந்து குர்கோவனுக்கு வந்தனர். 10 நாட்கள் மட்டும் உடன் தங்கியிய ஜோதியின் தாயார், தன்னுடைய அங்கன்வாடி சமையல்பணிக்கு மீண்டும் திரும்பிச்சென்றார். தந்தைக்கு வேண்டிய பணிகளைச் செய்து அவரை ஜோதி குமாரி கவனித்து வந்தார். மோகனும் மெல்ல குணமடைந்துவந்தார்
ஆனால் கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு திடீரென லாக்டவுன் அறிவி்த்ததால் சிறிது காலம் குர்கோவனில் ஜோதியும், மோகனும் தங்கினார். நாட்கள் செல்லச் செல்ல கையில் பணமில்லாததால், வேறு வழியின்றி தனது தந்தையை ைசக்கிளின் பின்புறம் அமரவைத்து தொடர்ந்து 10 நாட்கள் பயணித்து கடந்த 17-ம்தேதி பிஹார் தார்பங்கா வந்து சேர்ந்தார் ஜோதி குமாரி
தனது வைராக்கியமான பயணம் குறித்து ஜோதி குமாரி நிருபர்களிடம் கூறுகையில “ லாக்டவுன் தொடங்கியதிலிருந்து நானும் என் தந்ைதயும் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் எங்களை வெளியேற்றும் திட்டத்துடன் இருந்தார். வீ்ட்டின் மின்சாரத்தை துண்டித்து பல்வேறு சிரமங்களைக் கொடுத்ததால் சொந்த கிராமம் செல்ல முடிவு செய்தோம். தந்தைக்கு வருமானமும் இல்லை, சாப்பிடுவதற்கு உணவும்இல்லை என்பதால், சொந்த ஊருக்கு எப்படியாவது செல்ல நினைத்தேன்.
எனது கையில்இருந்த 500 ரூபாயக்கு என தந்தை தங்கியிருந்த வீட்டின் அருகே இருப்பவரிடம் ஒரு சைக்கிளை விலைக்கு வாங்கினேன். அவர் ரூ.1500 கேட்டார், என்னுடைய நிலைமைையக் கூறி ரூ.500 கொடுத்து மீதமுள்ள பணத்தை அனுப்பிவைக்கிறேன் என்றேன். அவரும் சம்மதித்தார். ஆனால் என் தந்தையோ என்னுடன் சைக்கிளில் வர மறுத்துவிட்டார். பாதுகாப்பாக இருக்காது என மறுத்தார், அவரை சமாதானம் செய்து என்னுடன் பயணிக்க வைத்தேன்
என் தந்தையை அழைத்துக்கொண்டு கடந்த 8-ம் தேதி குர்கவானிலிருந்து புறப்பட்டேன். நடக்க முடியாத எனது தந்தையை சைக்கிள் பின்பகுதியில் அமரவைத்து நாள்தோறும 100 கி.மீ பயணித்தேன். இரவு நேரத்தில் ஏதாவது பெட்ரோல்நிலையத்தில் இருவரும் ஓய்வெடுத்துக்கொண்டோம். அங்கிருந்தவர்கள் எங்கள் நிலைமையை அறிந்து உணவு கொடுத்து கவனித்துக்கொண்டார்கள்
நான் தந்தையை அழைத்துக் கொண்டு செல்லும்போது பலரும் தந்தையை கிண்டலடித்தார். மகளை ைசக்கிள் ஓட்டவைத்து பின்னால் அமர்ந்து செல்கிறாய் வெட்கமாக இல்லையா என்று கிண்டலடித்தார். என் தந்தை மனவருத்தம் அடைந்த போது அதைப்பற்றி கவலைப்படாதீர்கள் எனக்கூறி 10 நாட்கள் பயணித்து கடந்த 17-ம் தேதி பிஹார் வந்து சேர்ந்தேன்.
மற்றவர்கள் கிண்டல் செய்வதைப்பற்றி நான் கவலைப்படவி்ல்லை என் தந்தையை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்பதுமட்டும்தான் நோக்கம். என் தந்தை எங்களுக்காக அடைந்த காயங்கள் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் அவர்களுக்குத் தெரியாது” .
இவ்வாறு ஜோதி தெரிவித்தார்
பிஹாருக்கு இருவரும் வந்தபின் இருவரையும் தனிமை முகாமில் அரசு வைத்திருந்தது. இப்போது ஜோதி வீடு திரும்பிய நிலையில் அவரின் தந்தை மோகன் மட்டும் தனிமை முகாமில் இருக்கிறார்.
ஜோதி குமாரி சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்தபின் அவரை டெல்லிக்கு பயிற்சிக்காக அழைத்துள்ளார்.
இதுகுறித்து ஓம்கர் சிங் பிடிஐ நிருபரிடம் கூறுகையில் “ சிறுமி ஜோதி குமாரியிடம் பேசினேன், லாக்டவுன் முடிந்தபின் டெல்லிக்கு பயிற்சிக்காக அழைத்துள்ளோம். அவர் வந்து செல்வதற்கான அனைத்து செலவுகளையும் கூட்டமைப்பே ஏற்கும். தேவைப்பட்டால் ஜோதி குமாரி உடன் ஒருவரையும் அழைத்து வரலாம்.
இதுதொடர்பாக பிஹார் மாநில விளையாட்டு துறையுடன் பேசி அவரை டெல்லி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். ஜோதிக்கு இளம் வயதிலேயே நல்லதிறமை இருக்கிறது, 1200கி.மீ பயணிப்பது சாதாரண காரியமல்ல. உடல் வலிமையும் மனோதிடமும் தேவை. அது ஜோதி குமாரியிடம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்