ராணுவ தளவாட உதிரிபாகங்கள், சாதனங்கள் என 26 வகை பொருள்களை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
ராணுவத்தின் பயன்பாட்டுக்கு உள்ளூர் விநியோகிப்பாளர்களிடம் இருந்தே சாதனங்களை கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூலம் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி தொழிலை ஊக்குவிக்க முடியம் என்ற அரசின் முடிவுக்கு ஏற்ப புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வது என கண்டறியப்பட்டுள்ள சாதனங்கள், உதிரிபாகங்கள் அனைத்தும் தற்போது கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து முன்னுரிமை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டியவை என 127 பொருள்களை பட்டியலிட்டு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தற்போது அறிவித்துள்ள 26 பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
இனிமேல் இந்த ராணுவ உதிரி பாகங்கள், சாதனங்களை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் உள்ளூர் விநியோகிப்பாளர்களிடம் இருந்து வாங்க வேண்டும்.இந்த சாதனங்கள் தயாரிப்பில் உள்ளூர் பொருள்கள் விகிதம், 40 முதல் 60 சதவீதம் இருக்கவேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தொழில் துறைக்கு ஊக்கம் தரும் வகையில் சில சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். கணிசமானஅளவுக்கு இந்தியா தற்போதுதளவாடங்களையும் ஆயுதங்களையும் இறக்குமதி செய்கிறது. இதை குறைக்க வேண்டும் என்பது இந்திய அரசின் நோக்கம். ஆயுதங்கள், தளவாடங்களை அதிக அளவு கொள்முதல்செய்து இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. எனவே, சர்வதேசதளவாட உற்பத்தி நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய ராணுவம் 13,000 கோடிடாலர் அளவுக்கு ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.