ஜூன் 1ம் தேதி முதல் குறிப்பிட்ட 200 ரயில்களை இயக்கப் போவதாக ரயில்வே அறிவித்ததையடுத்து புக்கிங் தொடங்கிய சில மணிநேரங்களில் 2.37 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்தன.
“நேற்று மாலை 4 மணியளவில் புக்கிங்குக்கு 101 ரயில்கள் இருந்தன. 2,37,751 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்தன” என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
வியாழன் காலை 10 மணிக்கு புக்கிங் தொடங்கியது. இந்த ரயில்களில் ஏ/சி, ஏ/சி அல்லாத பெட்டிகள் இணைக்கப்படும்.
இதற்காக மண்டல ரயில்வே நிர்வாகங்களை ரயில்வே போர்டு சமூக தூரம் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ‘இன்று முதல் படிப்படியாக ரிசர்வேஷன் கவுண்ட்டர்களை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதற்கான அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன’ என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
மகாராஷ்ட்ரா மாநில டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்படும். பயணிகளுக்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும், ஏனெனில் மகாராஷ்ட்ரா இந்தியாவில் கரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாகையால் அங்கு மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு அனுமதி இல்லை.
மகாராஷ்ட்ராவுக்குள் ரயில்களுக்கான புக்கிங் அனுமதி கிடையாது என்று ரயில்வே அறிவித்துள்ளது