புதன்கிழமையான இன்று பெங்களூருவில் மதியம் 1.30 மணியளவில் பெரிய வெடிகுண்டு வெடித்தது போல், இடி விழுந்தது போல், நிலநடுக்கம் போல் பெரிய, பயங்கர சப்தம் பல பகுதிகளிலுள்ள மக்களுக்குக் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது என்னவென்று இன்னமும் கண்டுபிடிக்கப்படாததால் இப்போதைக்குப் புரியாத புதிராகவே உள்ளது.
ஒயிட்ஃபீல்ட், எலெக்ட்ரானிக் சிட்டி, ஹெச்.ஏ.எல்., ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட், மற்றும் பிற பகுதி மக்கள் சமூகவலைத்தளத்தில் மதியம் 1.40 மணியளவில் பெரிய இடிவிழுந்தது போல், குண்டு வெடிப்பு போல் பெரிய சப்தம் கேட்டதாகவும், சிலர் ஜன்னல்கள் குலுங்கியதாகவும் தகவல்களைப் பதிவிட்டுள்ளனர்.
வித்யா என்ற பெண் பெல்லந்தூரைச் சேர்ந்தவர் கூறும்போது, ‘ஏதோ கட்டிடம் இடிந்து விழுந்ததைப் போன்று இருந்தது. பயமுறுத்தும் சப்தம் இது. நான் இதனை என் உறவினர்கள் குரூப்பில் போட்ட போது அவர்களும் தங்கள் பகுதியிலும் கேட்டதாகக்கூறிய போது நான் பயந்தே போய்விட்டேன் என்றார்
இதனையடுத்து கர்நாடகா மாநில பேரிடர் கண்காணிப்பு மைய அதிகாரி ஒருவர், “மக்கள் கூறும் இந்த சப்தம், ஜன்னல் ஆடியது என்பது நிலநடுக்கத்தினால் அல்ல, ஏனெனில் நிலநடுக்கமானிகள் எந்த ஒரு பூமி ஆட்டத்தையும் பதிவு செய்யவில்லை. இது ஏதோ தெரியாத சப்தமாக உள்ளது. முக்கியமாக தரை அதிர்வு எதுவும் பதிவாகவில்லை. அது போன்று சீஸ்மோ மீட்டர்களில் பதிவும் ஆகவில்லை” என்றார்.
ஹெச்.ஏ.எல். மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் இந்தச் சப்தத்திற்கும் தங்கள் நிறுவனத்தின் சோதனைகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றார்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் 100 என்ற எண்ணுக்கு இது தொடர்பாக எந்த ஒரு அழைப்பும் வந்ததாகப் பதிவாகவில்லை.
போலீஸ் அதிகாரிகள், விமானப்படைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு ஏதேனும் விமானச்சோதனை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும் விசாரித்தனர். இன்னும் கண்டுபிடிக்கப்படாத இந்த சப்தம் புரியாதபுதிராகியுள்ளது.
போலீஸ் அதிகாரிகள், விமானப்படைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு ஏதேனும் விமானச்சோதனை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும் விசாரித்தனர். இன்னும் கண்டுபிடிக்கப்படாத இந்த சப்தம் புரியாதபுதிராகியுள்ளது.