ராஜஸ்தானிலிருந்து வந்த பேருந்துகளை உத்தரப்பிரதேசத்துக்குள் அனுமதிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து உ.பி.காங்கிரஸ் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான அஜய் குமார் லாலு மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் விவேக் பன்சல் ஆகியோரை ஆக்ரா போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மற்றும் இவர்களுடன் இருந்த 4-5 காங்கிரஸ் தொண்டர்கள் மீது ஃபதேபுர் சிக்கிரி காவல் நிலையத்தில் மக்கள் தொற்று நோய் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்களை நொய்டா மற்றும் காஜியாபாத் எல்லைகளுக்கு உ.பி.அரசுதான் கொண்டு வரச்சொன்னது, ஆனால் வழியில் ஆக்ரா போலீஸ் தடுத்து நிறுத்தியது.
இதனை காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு எதிர்த்தார். இவருடன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் விவேக் பன்சல் உள்ளிட்ட 5-6 பேரை போலீசார் கைது செய்த போலீசார், லாக்டவுன் சட்டத்திட்டங்களான சமூக தூரம், முகக்கவசம் அணிவது ஆகியவற்றை கடைப்பிடிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று வழக்குப் பதிவு செய்துள்ளது