அர்னாப் கோஸ்ஸாமி : கோப்புப்படம் 
இந்தியா

சோனியா காந்தி மீது அவதூறு: எப்ஐஆர்-ஐ ரத்து செய்யக்கோரும் அர்னாப் கோஸ்ஸாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பிடிஐ

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் இரு சாதுக்கள் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு பேசியதாகக் கூறி பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி ரிபப்ளிக் சேனலின் ஆசிரியர் அர்னாப் கோஸ்ஸாமி தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது

மேலும், மற்றொரு நிகழ்ச்சியில் குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் விதமாக அர்னாப் கோஸ்ஸாமி பேசியதாக கடந்த 2-ம் தேதி அர்னாப் மீது மும்பை போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையும் ரத்து செய்யக் கோரி அர்னாப் மனுத்தாக்கல் செய்திருந்தார். இரு வழக்கிலும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது

குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் வகையில் அர்னாப் பேசியதாகக் கூறி மும்பை போலீஸார் பதிவு செய்த முதல்தகவல் அறிக்கையில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் அர்னாப் மீது எடுக்கக்கூடாது என்று கடந்த 11-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அவதூறாகப் பேசியதாகக்கூறி காங்கிரஸ் கட்சியினர் அளி்த்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் கீழ் அர்னாப் மீது 3 வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கத் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த விவகாரத்தில் புதிதாக எந்த வழக்குப் பதிவும் செய்யக்கூடாது என்றும் உத்தரவி்ட்டிருந்தனர்.
இந்த சூழலில்தான் குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் வகையில் அர்னாப் பேசியதாகக் கூறி மும்பை போலீஸார் பதிவு செய்த முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் வகையில் அர்னாப் பேசியதாகக் கூறி மும்பை போலீஸார் பதிவு செய்த எப்ஐஆர்ரை ரத்து செய்யக்கோரி அர்னாப் தாக்கல் செய்த மனு கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

அப்போது அர்னாப் தரப்பில் வழக்கறிஞர் ஹரி்ஸ் சால்வே வாதிடுகையில் “ குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்திய விதத்தில் பேசியதாகக்கூறி அர்னாப்பிடம் போலஸீார் 12 மணிநேரம் விசாரித்துள்ளார்கள்.அதில் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு அதன்பின் ஏற்பட்டுள்ளது. இது முழுக்க அரசியல் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரம் குறிவைக்கப்படுகிறது ” எனத்தெரிவித்தார்

மகாராஷ்டிரா அரசு தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் “ உச்ச நீதிமன்றம் அர்னாப் கோஸ்ஸாமிக்கு வழங்கிய பாதுகாப்பை அவர் தவறாகப்பயன்படுத்தி தன்னை விசாரிக்கும்அதிகாரிகளை நிகழ்ச்சி மூலம் மிரட்டுகிறார்” எனத் தெரிவித்தார்

இந்த வழக்கில் அன்று உத்தரவிட்ட நீதிபதிகள், பால்கர் விவகாரத்தில் சோனியா காந்தியை அவதூறகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த பாதுகாப்பின் காலம் முடிந்துவிட்டால் அர்னாப் கோஸ்ஸாமி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி கூடுதல் பாதுகாப்பை கோரலாம்.

அதேபோல குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தியதாக மும்பை போலீஸார் பதிவு செய்த முதல்தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டுமென்றாலும் அது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை அர்னாப் அணுகலாம் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT