கோப்புப்படம் 
இந்தியா

வங்கிகளில் கடன் தவணை செலுத்தும் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படலாம்: ஆய்வறிக்கையில் தகவல்

பிடிஐ

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கொண்டுவரப்்பட்ட லாக்டவுனால் தொழில்கள், வர்த்தகம் முடங்கியதால், வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்தும் காலத்தை 3 மாதங்கள் நீட்டித்து ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்தது. அந்த தவணை செலுத்தும் காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க வாய்ப்புள்ளததாக எஸ்பிஐ வங்கி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.1.76 கோடிக்கான பொருளாதார நிதித்திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறித்வித்தார். பின்னர் ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு பல்ேவறு சலுகைகளை வழங்கியது.

அதில் குறிப்பாக, “கரோனாவால் வேலையிழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம். பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த பரிந்துரை பொருந்தும். கடன் தவணை செலுத்த வங்கிகள் வழங்கும் 3 மாத அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. 3 மாத கடன் தவணையை (மார்ச் முதல் மே 31 வரை) செலுத்தாததால் அதனை வராக்க டனாகவும் கருதக்கூடாது” என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் 4-வது கட்டமாக லாக்டவுன் இன்று முதல் வரும் 31-ம் தேதிவரை அறிவி்க்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இன்னும் பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பாததால், கடன் தவணை செலுத்தும் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிக்கலாம் என ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

இதுகுறித்து ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) எகோராவ் ஆய்வறிக்கையில் “ கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படும் என்பதால் வங்கிகளில் கடன் பெற்றவர்களிடம் 3 மாதங்கள் கடன் தவணை வசூலிக்க ேவண்டும். 3 மாத தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

இப்போது 4-வதுலாக்டவுன் நீ்ட்டிக்கப்பட்டுள்ளதால், வங்கிகளில் கடன் தவணை செலுத்தும் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட வாய்ப்புள்ளது. இதன்படி நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிவரை தாங்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்துவதில்இருந்து விலக்கு அளிக்கப்படலாம்.அதாவது செப்டம்பர் மாதம் வட்டி மட்டும் ெசலுத்த வாய்ப்புள்ளது. ஆனால், வட்டியையும் நிறுவனங்கள் செலுத்தாத பட்சத்தில் அது ரிசர்வ் வங்கி விதிப்படி செயல்படா சொத்துக்கள் பட்டியலில் சேரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT