இந்தியா

22 தீவிரவாதியை இந்தியாவிடம் ஒப்படைத்தது மியான்மர்

செய்திப்பிரிவு

இந்தியாவிடம் 22 தீவிரவாதிகளை மியான்மர் ஒப்படைத்துள்ளது. மியான்மர் நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக 22 தீவிரவாதிகளும் மியான்மர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இங்குகொண்டு வரப்பட்ட பின்னர், 22 தீவிரவாதிகளும் மணிப்பூர் மற்றும் அசாமில் உள்ள மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சிறப்பு விமானத்தில் 22 பேரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் இந்த முழுமையான செயலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கண்காணிப்பில் நடந்ததாக கூறப்படுகிறது.

22 தீவிரவாதிகளில் 12 பேர்மணிப்பூரில் உள்ள யுஎன்எல்எப், பிரீபேக், கேஒய்கேஎல், பிஎல்ஏஆகிய நான்கு குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் மீதமுள்ள 10 பேர் அசாம் குழுக்களான என்டிஎப்பி (எஸ்),கேஎல்ஓ உடன் தொடர்புடையவர்கள்.

மியான்மர் நாட்டில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இந்த 22 தீவிரவாதிகள் ஊடுருவிய நிலையில் அவர்களைக் கண்டறியுமாறு மியான்மரை இந்தியா கேட்டுக்கொண்டது. அதுதொடர்பான தகவல்களையும் மியான்மரிடம் இந்தியா பரிமாறியது. அதன்படி அவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் 22 பேரையும் நாடு கடத்துமாறு மியான்மர் உத்தரவிட்டது.

அதன்படி அவர்கள் நாடு கடத்தப்பட்டு, சிறப்பு விமானத்தில்இந்தியா கொண்டு வரப்பட்டனர் என்று தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். - பிடிஐ

SCROLL FOR NEXT