இந்தியா

2012-ம் ஆண்டு முதல் 200 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

பிடிஐ

தீவிரவாதம், எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு 2012-ம் ஆண்டு முதல் 200 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் அளித்த எழுத்துபூர்வ பதிலில், 2014-ம் ஆண்டு 56 ராணுவ வீரர்களும், 2015-ல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 30 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 2012-ம் ஆண்டு 61 ராணுவ வீரர்களும் 2012-ம் ஆண்டு 54 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லையில் போர்நிறுத்த மீறல்கள், பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள், எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றுக்கு இந்திய ராணுவ வீரர்கள் 200க்கும் மேலாக 2012ம் ஆண்டு முதல் பலியாகியுள்ளதாக மனோகர் பரிக்கர் லோக்சபாவில் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT