தங்கள் குடும்பத்தினரை மனைவியை, குழந்தைகளை பார்ப்போமா மாடோமா என்ற கவலைகளில் பலநூறு மைல்களை நடந்தே கடக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை உடனடியாக அரசு கவனிக்க வேண்டும், இல்லையெனில் அது நம் தோல்வியையே பறைசாற்றும் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுஷிக் பாசு எச்சரித்துள்ளார்.
கார்னெல் பல்கலைக் கழக பேராசிரியரான கவுஷிக் பாசு, பற்றாக்குறை அதிகரித்தாலும் கவலைப்படாமல் இந்தியா தற்போதைய நிலையில் செலவினங்களை கவலைப்படமால் சிக்கனம் காட்டாமல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறார்,
இப்போதைக்கு அரசின் கவனம் முழுதும் பசி, பட்டினி, தீவிர வறுமை நிலையை நோக்கிய ஆயிரக்கணக்கான மக்களை நோக்கியே இருக்க வேண்டும்.
“பல நூறுமைல்களை நடந்தே செல்பவர்கள் எதற்காக அப்படிச் செல்கிறார்கள்? தங்கல் வீடுகளுக்குப் போக வேண்டும், இவர்கள் பெரிய அளவில் புலம்பெயர்ந்தவர்கள். ஆனால் தனிமைப்பட்டவர்கள் அவர்கள் மனம் முழுதும் தங்கள் குழந்தைகளைப் பார்ப்போமா, மனைவியை பார்ப்போமா, குடும்பத்தாரைப் பார்ப்போமா என்ற கவலையில் தோய்ந்துள்ளது. நாம் இவர்களை விரைவில் அணுகி தேவையானதைச் செய்யவில்லை எனில் இது நமக்கான தோல்வியாகவே முடியும். நம் கவனம் முழுதும் ஏழைகள் மீதுதான் இருக்க வேண்டும். நம்பிக்கை இழந்த புலம்பெயர்ந்தோர், தொழிலாளர்கள் மீதுதான் இருக்க வேண்டும்.
வரும் வாரங்களில் நாம் மிக மிக வேகமாக செயல்பட வேண்டும், பெரிய அளவில் நிதிக்கொள்கையில் பொறுப்பு வேண்டிய நாட்களாகும் இது.
இந்தியாவிலிருந்து அன்னிய முதலீடு 16 பில்லியன் டாலர்கள் வாபஸ் பெறப்பட்டது மார்ச்சில். இது பெரிய வாபஸ் தொகையாகும், இந்தியா ஒரு மூடுண்ட கட்டுப்பாட்டு பொருளாதாரமாக மாறுகிறதோ என்று உலக முதலீட்டாளர்கள் பதற்றமடைகின்றனர்.
நாம் அத்தகைய பயங்களை நீக்க வேண்டும். இந்திய ரூபாய் மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்களை நிலை நிறுத்துவதில் ஆர்பிஐ தயாராக இருக்க வேண்டும்.
வர்த்தகம் செய்ய எளிதான நாடு என்ற வகையில் 130வது இடத்திலிருந்து 63வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நாம் கட்டுப்பாட்டு சமூகம் என்ர ஒரு தவறை மீண்டும் உருவாக்கி விடக்கூடாது. தொற்று நோயைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் கட்டுப்படுத்தும் சமூகத்தை உருவாக்கிவிடக்கூடாது.
வரும் மாதங்களில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் ஆனால் இது உலகம் முழுதுமே நடக்கக் கூடியதுதான்.
அதற்குள் தொழிலாளர் சட்டங்களை மாற்றி 12 மணி நேர வேலை என்றெல்லாம் செய்வது தவறு .
அரசு ஒவ்வொரு நிதிப்பிரச்சினை சவால்கள் ஏற்படும் போதெல்லாம் ஆர்பிஐ கதவைத் தட்டிக் கொண்டிருந்தால் அது மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியை வலுவிழக்கவே செய்யும்.
கரோனா பெருந்தொற்றைப் பொறுத்தவரையில் பல நாடுகளை ஒப்பிடுகையில் நாம் ஓரளவுக்கு நல்ல நிலையில்தான் உள்ளோம். காரணம், நீண்ட கால நோய்த்தடுப்பாற்றல்தான். இந்தியா, சீனா, வங்கதேசத்தில் கரோனா மரணங்கள் ஒப்பீடு ரீதியாகக் குறைவுதான்.
ஒரு இந்தியக் குடிமகனாக நான் ஒரு லட்சியார்த்தமான நபர். என் லட்சியம் இந்தியாவை பணக்கார நாடாகவோ, உலகின் சக்தி வாய்ந்த நாடாகவோ உருவாக்குவதல்ல. இந்தியா அற ரீதியாக ஒரு சக்தியாக உலகிற்கு விளங்க வேண்டும் என்பதே. இவ்வளவு சுயநலம் வேண்டாம் என்பதை நாம் உலகிற்குக் கற்று கொடுக்க முடியும். அனைத்து மனிதர்களுக்குமான பரிவு அதாவது அவர்கள் இனம், மதம், சாதியைப் பார்க்காத பரிவு ஆகியவற்றை நாம் கற்றுக் கொடுக்க முடியும். இனம், மதம் என்று வெறுப்புணர்வை தூண்டும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது” என்றார் கவுஷிக் பாசு.