திருப்பதியில் புகழ்பெற்ற கோதண்டராம சுவாமி கோயிலில் பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பதியில் சீதை சமேத கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இக்கோயிலை பராமரித்து வருகிறது. பழம் பெரும் இக்கோயிலில் 3 நாள் பவித் ரோற்சவம் நேற்று தொடங்கியது.
நேற்று காலை, சீதை சமேத கோதண்டராமருக்கு சுப்ரபாத சேவைகள் நடைபெற்றன. பின்னர் ஸ்தபன திருமஞ்சன நிகழ்ச்சிகளும், ஹோம பூஜை களும் சிறப்பாக நடைபெற்றன. இரவு, உற்சவ மூர்த்திகளான சீதை, கோதண்டராமர், லட்சுமணர் ஆகியோர் தங்க திருச்சியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.