கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆரோக்கிய சேது செயலியாகும். ஆனால் இந்தச் செயலயுடன் மின் மருந்து விற்பனை நிலையங்கள் மூலம் மருந்து விற்பனைக்கு வசதி செய்து தரும் இணையதளம் இணைக்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனையடுத்து ஆரோக்கிய சேது செயலிக்கும் இந்த மின் வணிக மருந்து இணையதளத்துக்குமாம தொடர்பை துண்டிக்க வேண்டும் இதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என்று தெரிகிறது. http://www.aarogyasetumitr.in என்ற இணையதளம் ஆரோக்கிய சேது செயலியில் இணைக்கப்பட்டுள்ளது, இது பெரிய அளவில் சட்ட விரோதமானது. தன்னிச்சைய்யானது, இந்த இணையதளம் மின் மருந்து வர்த்தகத்துக்கு ஒரு மார்க்கெட்டிங் கருவியாகச் செயல்படுகிறது என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சவுத் மருந்தாளுனர்கள் மற்றும் விநியோக கூட்டமைப்பு இந்த மனுவை மேற்கொண்டுள்ளது. அரசு ஒரு அவசர தொற்று காலத்தில் மக்கள் நன்மைக்காக உருவாக்கிய ஆரோக்கிய சேது செயலி தனியார் தனது வர்த்தக நலன்களை ஊக்குவிக்கப் பயன்படுத்துவதை எபப்டி அனுமதிக்க முடியும்? என்று கேட்டுள்ளது இந்த மனு.
இந்த மனு வழக்கறிஞர்கள் அமித் குப்தா, மான்சி குக்ரெஜா, ஆகியோர் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தேசிய தகவல் மையம், நிதி ஆயோக் ஆகியவை இது தொடர்பாக அரசு செயலியில் வணிகநலன்களை ஊக்குவிக்க வேண்டான் என்பதை கோர்ட் அறிவுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் பயன்பாட்டுடன் இயங்கும் ஆரோக்கிய சேது செயலி கரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால் பயனாளர்களுக்கு அலெர்ட் அளிக்கும் செயலியாகும்.
உடனடியாக இந்த இணையதளத்தை மூடவும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
மொபைல் செயலியான ஆரோக்கிய சேதுவே இந்த மின் மருந்து வணிக இணையதளத்துக்கு இணைப்பு கொடுத்துள்ளது. இதனால் இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் அரசு அனுமதி பெற்றது என்ற தவறான தகவலையே பயனாளர்களுக்கு அளிக்கும் என்பதே இந்த மனுவின் பிரதான நோக்கமாகும்.
இந்த இணையதளத்தின் முகப்புப் பக்கம் ‘இங்கு சில அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன, நீங்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு இ-பார்மசிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் மருந்து கடைகளிலும் இதே மருந்துகள் கிடைக்கும் என்ற தகவலும் அதில் இல்லை. அரசு வளர்த்தெடுத்த ஒரு செயலியை தனியார் பயன்படுத்துவது சட்ட விரோதம். மேலும் இ-பார்மசிகள் மூலம்தான் கோவிட்-19 கட்டுப்பாட்டு அல்லது நோய் எதிர்ப்பு மருந்துகள் கிடைக்கும் என்ற தவறான ஒரு தகவலை இந்த இணையதளம் கொடுக்கிறது.
மொபைல் செயலியின் பெயரும் இணையதளத்தின் பெயரும் ஒன்றாக இருப்பது வேண்டுமென்றே செய்யப்பட்டது. செயலியின் சாதகம் மற்றும் நல்லெண்ணத்தை இணையதளம் தன் வணிக நலன்களுக்குப் பயன்படுத்தப்பார்க்கிறது. இணையதளம் அரசுக்குச் சொந்தமானது அல்ல.
இந்த இணையதளத்தில் குறிப்பிட்ட மருந்துக் கடை பட்டியலில் இணைய வேண்டுமெனில் அது இ-பார்மசியாக மட்டுமே இருக்க வேண்டும். இது பாரபட்சமானது, முற்றிலும் சட்ட விரோதமானது என்று மனுவில் சாடப்பட்டுள்ளது.