இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான சிப்லா நிருவனம் அமெரிக்காவின் ஜிலீட் சயன்சஸ் நிறுவனத்துடன் உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதாவது கரோனா தொற்றுக்கு பயனுள்ளதாகக் கருதப்படும் ரெம்டெசிவைர் மருந்தை உற்பத்தி செய்து விற்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நொய்டாவில் உள்ள ஜூப்ளியன் லைஃப் சயன்ஸஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜூப்ளியண்ட் ஜெனரிக்ஸ் நிறுவனம் ஜிலீட் நிறுவனத்துடன் ரெம்டெசிவைர் உற்பத்திக்கு கையெழுத்திட்ட பின்பு தற்போது பிரபல சிப்லா நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளது
இந்த ஒப்பந்தத்தின் படி செயல்பூர்வமான மருந்தியல் உட்பொருள் மற்றும் முழுவதும் முடிக்கப்பட்ட தயாரிப்புக்கும் இடமுள்ளது.
ஜிலீட் சயன்சஸ் நிறுவனம் ரெம்டெசிவைர் மருந்தை தயாரிக்கும் முறையை சிப்லாவுக்குத் தெரிவிக்கும்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் நெருக்கடி நிலையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு இதனைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
மிதமானது முதல் தீவிர கரோனா அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவைர் கொடுக்கப்பட்டு 3ம் கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில் அமெரிக்க கழகம் இதனைப் பயன்படுத்த அனுமதி தந்துள்ளது.
மேலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இது எபோலா வைரஸ் வெடிப்பின் போது சிகிச்சைக்குப் பயன்பட்ட மருந்தாகும்.