பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

4-வது லாக்டவுன் வருமா? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி திங்களன்று ஆலோசனை: என்னென்ன அம்சங்கள் பேசப்படும்?

ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட லாக்டவுனை நீக்குவது, பொருளதாாரநடவடிக்கைகளை படிப்படியாகத் தொடங்குவது குறித்து மாநில முதல்வர்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏற்கெனவே மாநில முதல்வர்களுடன் லாக்டவுன் தொடர்பாக 4 கட்டங்களாக காணொலி மூலம் ஆலோசனை நடத்தியுள்ள பிரதமர் மோடி 5-வது கட்டமாக நாளை ஆலோசிக்க உள்ளார்.

இந்த ஆலோசனையில் நாட்டில் 3-வது கட்டமாக கொண்டுவந்துள்ள லாக்டவுன் நீட்டிக்கப்படுதலுக்கான வாய்ப்பு, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குதல், விதிகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இ்ந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் மற்றும் 27-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தி முதல்வர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். கடைசியாக நடந்த கூட்டத்திலும் மாநில முதல்வர்கள் 9 பேரில் 5 பேர் லாக்டவுனை நீட்டிக்க வலியுறுத்தினர். இதையடுத்து மூன்றாவது கட்டமாக ேம 3-ம் தேதி முதல் 17ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது

நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாத்ம 25-ம் தேதி முதல் 3 கட்டங்களாக லாக்டவுனில் இருந்த போதிலும் தற்போது கரோனாவில் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இருப்பினும் கடந்த மாதம் 20-ம் தேதிக்கு பின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க விதிகளை மத்தியஅரசு தளர்த்தியது. நாட்டில் உள்ள 775 மாவட்டங்களில் கரோனா பாதிப்புள்ளான மாவட்டங்கள், மிதமான பாதிப்ப , பாதிப்பு இ்ல்லாதவை என சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாகப் பிரித்து அறிவித்தது.

மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள், ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கி வருகின்றனர். சில மாநிலங்களில் தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டு முழுமையாக பொருளாதாரம் இயல்புபாதைக்கு வரவில்லை.

இந்த சூழலில் நாளை நடக்கும் கூட்டத்தில் லாக்டவுனை தளர்த்துவது, பொருளதார நடவடிக்கைகளை படிப்படியாக தொடங்குவது, மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கபடலாம்.

மத்திய உள்துறை ெசயலாளர் ராஜீவ் கவுபா, மாநில, யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத்துறைச்செயலாளர்களுடன் மாநிலத்தில் உள்ள கரானோ வைரஸ்நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது கருத்து தெரிவித்த மாநில தலைமைச் செயலாளர்கள், மாநிலங்களில் கரோனாத் தடுப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்றும், அதேசமயம், பொருளதார நடவடிக்கையையும் திட்டமி்ட்டு படிப்படியாகத் தொடங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆதலால், நாளை கூட்டத்தில் லாக்டவுன் நீட்டிப்பு, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். வரும் 17-ம் தேதிக்குப்பின் விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது, அதேசமயம், தற்போது கரோனா ஹாட்ஸ்பாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை ஆகியவற்றில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது.

அதேசமயம், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடந்த இரு நாட்களுக்குமுன் அளித்த பேட்டி ஒன்றில் 4-வது கட்டமாக லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டும், அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT