இந்தியா

கர்நாடக மாநிலத்தில் பார், கேளிக்கை விடுதிகளில் 17-ம் தேதி வரை மது விற்கலாம்

இரா.வினோத்

கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பே கர்நாடகாவில் மதுபான கடைகள் மூடப்பட்டன. 46 நாட்களுக்கு பின்னர் கடந்த 4-ம் தேதி எம்.ஆர்.பி., எம்.ஐ.எஸ்.எல் மதுபான கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்க‌ப்பட்டது. கடந்த சில தினங்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து பலர் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் கர்நாடக அரசின்கலால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் உள்ளஉணவு விடுதிகள், மதுபான கடைகள், பார், பப், கிளப் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகளில் வரும் 17-ம் தேதி வரை மதுபானங்கள் விற்க அனுமதிக்கப்படுகிறது. அதேநேரம் இந்திய வகை மதுபானங்களை குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மதுபானங்களை அங்கேயே அமர்ந்து அருந்த அனுமதியில்லை. வீட்டுக்கு எடுத்துச் சென்று அருந்துவோருக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மது விற்பனையின் போது முகக் கவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி பயன்பாடு உள்ளிட்டவற்றை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT