இந்தியா

கங்கை நதி நீரில் கரோனா வைரஸ் சிகிச்சை- ஆதாரம் கோருகிறது ஐசிஎம்ஆர்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்துவது குறித்து ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு வந்துள்ள பரிந்துரைக்கு வலுவான ஆதாரங்கள் தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூறியுள்ளது.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தூய்மை கங்கைக்கான தேசியஇயக்கம் (என்எம்சிஜி) ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் சிகிச்சைக்கு பல்வேறு வழி அல்லது வகையிலான கங்கை நீரை பயன்படுத்துவது குறித்து ஆய்வகப் பரிசோதனையை தொடங்குமாறு என்எம்ஜிசி-க்குபல்வேறு பரிந்துரைகள் வந்தன. கங்கை தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட சிலர் இந்தப் பரிந்துரையை அளித்திருந்தனர்.

இந்தப் பரிந்துரைகளை ஐசிஎம்ஆருக்கு ஜல்சக்தி அமைச்சகம் அனுப்பியது. இந்நிலையில் ஐசிஎம்ஆரில் ஆய்வுப் பரிந்துரைகளை மதிப்பிடும் குழுவின் தலைவர் ஒய்.கே.குப்தா கூறும்போது, “இந்தப் பரிந்துரை தொடர்பான ஆய்வகப் பரிசோதனைக்கு வலுவான ஆதாரங்கள் தேவை. தற்போதைய ஆதாரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் போதுமானதாக இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT