விசாகப்பட்டினம் எல்.ஜி. பாலி மர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிந்து 12 பேர் உயிரிழந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் நஷ்ட ஈடாக ரூ. 50 கோடி முன்பணம் செலுத்த வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டி னம் ஆர்.ஆர். வெங்கடாபுரம் பகுதியில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் வியா ழக்கிழமை பாலிஸ்டெரெயின் வாயு திடீரென கசிந்து சுற்றுவட் டார மக்கள் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். சுமார் 2 ஆயிரத்துக் கும் அதிகமானோர் கே.ஜி.எச் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 195 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழிற்சாலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ. பரப்பளவில் உள்ள 5 கிராம மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
48 மணி நேரத்துக்குள்..
இந்நிலையில், விஷவாயு கசிவு தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆய்வு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து தொழிற்சாலையில் 120 டிகிரி வெப்பத்தில் பாலிஸ் டெரெயின் வாயு உள்ளதாகவும் தொழிற்சாலை மூடி இருக்கும் போது இது 5 டிகிரியில் பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். தற்போது வாயுவின் வெப்ப அளவை குறைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் சாதாரண நிலை உருவாகும் என இக்குழு நம் பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்துக்கும் தேசிய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கும் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
அதில், விஷவாயு பரவியதால் உயிர் நஷ்டம் அதிகமாக உள்ள தென்பதால் முன்பணமாக ரூ.50 கோடி செலுத்த வேண்டுமென நிறு வனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நீதிபதி சேஷசயன ரெட்டி தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிய மனம் செய்துள்ளது. இக்குழு விசாரணை நடத்தி வரும் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
இதற்கிடையே விஷவாயு கசிந்த தில் உயிரிழந்த 12 குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கு வதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். மேலும் வெண்டிலேடரில் உள்ளவர் களுக்கு ரூ.10 லட்சமும் மயக்க மடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றோருக்கு ரூ.25 ஆயி ரமும் லேசான காயமடைந்தவர் களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கு வதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி, நேற்று ஆந்திர அரசு இதற்கான காசோலையை விசாகப் பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தது.