நில மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டினார்.
நாக்பூரில் நேற்று அவர் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில், விவசாயிகளுக்கு பலனளிக்க கூடிய எந்த யோசனை யாக இருந்தாலும் சேர்க்க அரசு தயாராக இருக்கிறது. இதுதொடர் பாக கருத்து தெரிவிக்கலாம் என்று அரசு திரும்பத் திரும்ப கூறி வந்தது. ஆனால், காங்கிரஸ் எதிர்ப்பு தெரி வித்தது. இப்போது அவசர சட்டம் இன்றுடன் முடிகிறது. அதே நேரத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது.
அதற்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் பிரச்சினையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடு வது தெரிந்துவிட்டது. இவ்வாறு கட்கரி கூறினார்.