‘‘வீடுகளில் தேசிய கொடியேற்றி, இந்திய சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடுங்கள்’’ என்று இஸ்லாமிய மதப்பள்ளி ‘பத்வா’ வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் தியோபந்த் என்ற நகரில் உள்ளது ‘தாருல் உலூம் தியோபந்த்’ இஸ்லாமிய மதப்பள்ளி. இப்பள்ளி நிர்வாகம், இந்திய சுதந்திர தினத்தை முஸ்லிம் கள் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக ‘பத்வா’வும் வெளியிடப்பட்டுள்ளது.
தாருல் உலூம் தியோபந்த் பள்ளியின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் உஸ்மானி நேற்று கூறிய தாவது:
இந்திய சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்து டன் கொண்டாட வேண்டும். வீடுகளி லும் தங்களுடைய வர்த்தக நிறு வனங்களிலும் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, தாருல் உலூமைச் சேர்ந்த நமது உலமாக்கள் (மதத் தலைவர் கள்) முக்கிய பங்காற்றி உள்ளனர். முழு சுதந்திரம் என்ற முழக்கத்தை அறிவித்தது தாருல் உலூம்தான். அதன்பிறகுதான் ‘பூர்ண ஸ்வராஜ்’ இயக்கம் தோன்றியது.
உசைன் அகமது மதானி முதல் மவுல்வி அகமதுல்லா ஷா வரை ஏராளமானோர், சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தத் தாய் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு அஷ்ரப் உஸ்மானி கூறினார்.
தாருல் உலூம் பள்ளி ஆன்மிக தலைவர் மவுலானா அர்ஷத் குவாஸ்மி கூறுகையில், ‘‘நாட்டில் உள்ள எல்லா மதரஸாக்களிலும் தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாட அறிவுறுத்தி உள்ளோம். மேலும், மதரஸாக் களில் உள்ள மாணவர்களுக்கு இந்திய சுதந்திர போராட்ட வரலாற் றினையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பலத் தையும் சொல்லி தரும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.
அயோத்தியில் மதரஸா நடத்தி வரும் ஹபீஸ் அக்லாக் அகமது லதிபி கூறுகையில், ‘‘முஸ்லிம் களின் தேசப்பற்றை சில மதவாத சக்திகள் எப்போதும் கேள்விக் குறியாக்குகின்றன. ஆனால், எங்கள் மதரஸாக்களில் தேசப்பற்றை சொல்லி தருகிறோம்’’ என்றார்.