இந்தியா

‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால் ரூ.1000 அபராதம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம்தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும்.அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

இந்நிலையில், டெல்லியை அடுத்த நொய்டா சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் அகிலேஷ்குமார் நேற்று கூறும்போது, ‘‘நொய்டாவில் வசிப்போர் ஸ்மார்ட்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யாதவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். (இந்தச் சட்டத்தின்படி ரூ.1000 அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.)’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT