இந்தியா பாகிஸ்தான் இடையி லான 1965-ம் ஆண்டு போரின் 50-வது ஆண்டு தினம் நேற்று அனுசரிக் கப்பட்ட நிலையில் இப்போரில் பங்கேற்ற இந்திய வீர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “1965-ம் ஆண்டு போரின் 50-வது ஆண்டு தினத்தில் இப்போரில் நமது தாய்நாட்டுக்காக போரிட்ட அனைத்து வீரர்களையும் தலைவணங்கி போற்றுகிறேன். அனைத்து தடைகளையும் கடந்து அவர்கள் வெற்றி பெறுவதுடன் இந்தியாவின் ஒருமைப்பாட்டை காக்கின்றனர்” என்று குறிப்பிட் டுள்ளார். டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் நேரில் மரியாதை செலுத்தினார்.