இந்தியா

பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு பிறகு காதி துணிகள் விற்பனை அதிகரிப்பு: தூதுவராக அமிதாப் பச்சன் நியமனம்

ஐஏஎன்எஸ்

பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு பிறகு, காதி துணிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் காதி மேம்பாட்டு தூதுவராக பணியாற்ற பிரபல நடிகர் அமிதாப் பச்சன் ஒப்புக் கொண்டுள்ளார் என்று காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (கேவிஐசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேவிஐசி தலைமை நிர்வாக அதிகாரி அருண் குமார் ஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த அக்டோபர் மாதம் வானொலியில் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, ‘துணிகள் உட்பட காதி பொருட்களை பயன்படுத்துங்கள். அதனால் கிராமப்புற ஏழைகள் பலன் பெறுவார்கள்’ என்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார். அதன்பிறகு மத்திய டெல்லியில் உள்ள காதி அங்காடியில் விற்பனை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் காதியின் மேம்பாட்டு தூதுவராக சம்பளமின்றி பணியாற்ற பிரபல நடிகர் அமிதாப் பச்சன் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார்.

பிரதமர் மோடியின் கோரிக் கைக்கு பிறகு நுகர்வோருக்கு ஏற்ற வகையில் மேலும் பல புதிய டிசைன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளோம். இளைஞர்களை கவரும் வகையில் காதி ஜீன்ஸ், டி ஷர்ட்டுகள், ஜாக் கெட்டுகள் போன்றவை அறிமுகம் செய்துள்ளோம். இவ்வாறு அருண் குமார் ஜா கூறினார்.

SCROLL FOR NEXT