கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் : ஹிஸ்புல் முஜாகிதீன், டிஆர்எப் அமைப்பு பொறுப்பேற்றதாக அறிவிப்பால் குழப்பம்

ஐஏஎன்எஸ்

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் கர்னல், மேஜர் உள்பட 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பும், தி ரெசிஸ்டென்ஸ் ஃபிரன்ட்(டிஆர்எப்) அமைப்பும் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளன

குப்வாரா மாவட்டத்தில் ஹன்ட்வாரா பகுதியில் நேற்று என்கவுன்டர் நடந்து கொண்டிருந்த போது, பாதுகாப்புப் படையினருக்கு தொலைப்பேசி மூலம் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றதாக ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு தெரிவித்தது.

அதேசமயம் தி ரெசிஸ்டென்ஸ் ஃபிரன்ட் அமைப்பினர் தங்களின் தாக்குதலுக்கு பொறுப்பேற்று தாக்குதலில் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளின் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இரு தீவிரவாத அமைப்பினரும் பொறுப்பு ஏற்றுள்ளதால், ஏதாவது திசைதிருப்பும் வேலையா என பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஆலோசித்து வருகின்றனர்.

குப்வாரா மாவட்டம் ஹன்ட்வாரா பகுதியில் நேற்று இரவு ஒரு வீ்ட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் இருவர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தினர்.. தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

8 மணிநேரத்துக்கும் மேலாக இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால் தாக்குதலில் ராணுவத்தின் மேஜர், கர்னர், 21 ராஷ்ட்ரிய ரைபிள் படையின் 2 வீரர்கள், ஜம்மு காஷ்மீர் போலீஸ் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டனர். இரு தீவிரவதிகளும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், “ என்கவுன்ட்டர் நடந்த போது இரு தீவிரவாதிகளில் ஒருவர் ஹிஸ்புல் தீவிரவாத குழுவிடம் செல்போன் மூலம் பேசியதை இடைமறித்து கேட்டோம். அப்போது உடனிருக்கும் மற்றொரு தீவரவாதி தாரிக் காயமடைந்துள்ளார் எனத் தெரிவித்தார். இதன் மூலம் ஒரு தீவிரவாதி பெயர் தாரிக் என்பது தெரியவந்தது “ எனத் தெரிவித்தனர்

இந்நிலையில் இந்த தாக்குதல் முடியும் முன்பாக தி ரெசிஸ்டென்ஸ் ஃபிரன்ட் தீவிரவாத அமைப்பு இரு தீவிரவாதிகளின் புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு இருவரும் வீரமரணம் அடைந்ததாக தெரிவித்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இரு தீவிரவாதிகள் சமையல் செய்த இடம், உணவருந்தியது, ஆயுதங்கள் புகைப்படங்களையும் வெளியி்ட்டது.

மேலும் தி ஜாயின்ட் காஷ்மீ்ர் ஃபிரண்ட்(டிஜேகேஎப்) எனும தீவிரவாத அமைப்பும் இதேபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு பொறுப்பேற்றதாக தெரிவித்திருந்தது. இந்த இரு அமைப்புகளும பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உதவியுடன் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT