கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டை: தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய மக்களை மீட்ட ராணுவ கர்னல், மேஜர் உள்பட 5 பேர் வீர மரணம்: இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பிடிஐ


காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து நடந்த தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர், கர்னல் உள்பட 5 பேர் வீரமரணமடைந்தனர். தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல் அசுடோஷ் சர்மா, மேஜர் அனுஜ் உள்பட ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவல் துணை ஆய்வாளர் சகீல் குவாஸி உள்ளிட்ட 5 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவச் செய்தித்தொடர்பாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

காஷ்மீரின் வடக்குப்பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதி ராஜ்வார் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து கர்னல் சர்மா தலைமையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் நேற்று இறங்கினர். ஆனால் தீவிரவாதிகள் அந்த வனப்பகுதியிலிருந்து தப்பிச் சென்று சாஞ்சிமுல்லா எனும் கிராமத்துக்குள் புகுந்து ஒரு வீ்ட்டுக்குள் பதுங்கியதை ராணுவத்தினர் கண்டறிந்தனர். மேலும் அப்பாவி மக்கள் சிலரையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.

ஆனால், உடனடியாக தாக்குதல் நடத்தினால் கிராம மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது, தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீதும், பிணைக் கைதிகள் மீதும் தாக்குதல் நடத்தகூடும் என்பதால் இரவிலிருந்து தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். இருதரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை நள்ளிரவு 12 மணிக்கும் மேல் வரை நீடித்தது.

இறுதியில் வெற்றிகரமாக தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டனர். ஆனால் இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல் அசுடோஷ் சர்மா, மேஜர் அனுஜ் உள்பட ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவல் துணை ஆய்வாளர் சகீல் குவாஸி உள்ளிட்ட 5 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்

ராணுவ கர்னல் அசுடோஷ் சர்மா

. இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்." எனத் தெரிவித்தனர்

தீவிரவாதிகள் பிடியில் இருந்த மக்களை மீட்கும் முயற்சியில் உயிரையும் பொருட்படுத்தாமல் கர்னல் அசுடோஷ் சர்மா, மேஜர் அனுஜ் உள்பட ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவல் துணை ஆய்வாளர் சகீல் குவாஸி , இரு காவலர்கள் தீவிரவாதிகள் பதுங்கிய வீட்டுக்குள் துணி்ச்சலாகப் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்தான் தீவிரவாதிகளும், இந்த 5 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

SCROLL FOR NEXT