நெஸ்லே நிறுவனத்தின் மேகி உட்பட 9 வகை நூடுல்ஸ்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று நீக்கியது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த நெஸ்லே நிறுவனம் மேகி உட்பட 9 நூடுல்ஸ் வகைகளை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. இந்த நூடுல்ஸ்களில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூடோமைட் ரசாயனம் அளவுக்கு அதிகமாக இருப்பது ஆய்வக சோதனையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் அமைப்பு கடந்த ஜூன் 5-ம் தேதி நெஸ்லே நிறுவன நூடுல்ஸ்களுக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து அந்த நிறுவனம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் வி.எம்.கானடே, பி.பி.கோலப்வாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
நெஸ்லே நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இக்பால் சாகலா வாதாடிய போது, நெஸ்லேவின் மூன்று நூடூல்ஸ் வகைகள் மட்டுமே சோதனை செய் யப்பட்டன. ஆனால் 9 வகைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். மகாராஷ்டிர மருந்து, உணவுக் கட்டுப்பாட்டு ஆணையத் தின் வழக்கறிஞர் டேரியஸ் காம் பெட்டா கூறியபோது, காரீயம் அதிகம் கலந்திருந்த நூடுல்ஸ்களை நெஸ்லே நிறுவனம் ஆதாரமில்லாமல் அழித்துவிட்டது என்று புகார் கூறினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
நெஸ்லேவின் 9 வகை நூடுல்ஸ் களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப் படுகிறது. எனினும் அவற்றை சந்தை யில் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது. ஒன்பது நூடுல்ஸ் மாதிரி களையும் மொகாலி, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆய்வகங்களில் பரி சோதனை செய்து 6 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நெஸ்லே நிறுவனம் நூடுல்ஸ்களை தயாரிக்கக் கூடாது.
ஆய்வக சோதனை நடத்தப்படாத 6 வகை நூடுல்ஸ்களுக்கு எதன் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கள் உத்தரவிட்டனர். மூன்று ஆய்வகங் கள் அளிக்கும் அறிக்கையின் அடிப் படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று நீதித்துறை வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.