பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மொபைல் போனில்  ஆரோக்கிய சேது செயலி வைத்திருப்பது கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

பிடிஐ

கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அனைவரும்தங்களின் மொபைல் போனில் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

அதிலும் கரோனா பாதிப்பு இருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசி்க்கும் மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

கொரோனா பரவலைத் தடுக்க, இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட செயலிதான், 'ஆரோக்கிய சேது'. தற்போது, இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வரும் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தச் செயலி, மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்தது. இந்தச் செயலி, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் மூலம் செயல்படுவதால், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகியிருக்கும். இதன்மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது.

நாடுமுழுவதும் கரோனா பரவல் வேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 3-ம் கட்ட லாக்டவுன் வரும் 4-ம் தேதி முதல் 17ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் ேநற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களின் ஸ்மார்ட், மொபைல் போனில் கண்டிப்பாக மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியை பதவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இதை அந்தந்த தனியார் நிறுவனங்களும், அரசு துறைகளும் ஊழியர்கள் 100 சதவீதம் பயன்படுத்துகிறார்களா என்பதையும் உறுதி செய்வது பொறுப்பாகும்” எனத் தெரிவித்துள்ளது

SCROLL FOR NEXT