ராஜஸ்தானில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 8,500 ஏழை குடும்பத்தினருக்கு உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக, விவசாயி ஒருவர் தான் சேர்த்து வைத்திருந்த ரூ.50 லட்சத்தை செலவிட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் உம்மத்நகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் நிவாஸ் மந்தா (39) கூறியதாவது:
ஊரடங்கு அமலுக்கு வந்தசில நாட்களில், பலர் பணமின்றிபசியால் வாடுவதாக கேள்விப்பட்டேன். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். இதுகுறித்து என் தந்தையிடம் பேசினேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்றார்.
பின்னர் என் தந்தை தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்தார். எனக்கு அது ஊக்கமாக இருந்ததால் என்னிடம் இருந்த பணத்தையும் சேர்த்து ரூ.50 லட்சத்துக்கு உணவு தானியங்களை வாங்கினோம். அவற்றைபாக்கெட் செய்தோம். 10 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ அரிசி, 1 கிலோ எண்ணெய், சோப், பிஸ்கட் ஆகியவை அடங்கிய தொகுப்புகளாக பையில் அடைத்தோம்.
பின்னர் தன்னார்வ குழுக்களைநியமித்து உதவி தேவைப்படுவோரின் பட்டியலை தயாரித்தோம். குறிப்பாக அரசின் உதவி கிடைக்காதவர்களை இந்தப் பட்டியலில் சேர்த்தோம். பின்னர் கிராமம் கிராமமாக சென்று விநியோகம் செய்து வருகிறோம். இதுவரை 83 கிராமங்களைச் சேர்ந்த 8,500 பேருக்கு வழங்கி உள்ளோம்.
இந்தத் தகவலைப் பற்றி அறிந்தபிரதமர் மோடி எங்கள் சேவையைப் பாராட்டி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதைப்பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுமேலும் உதவி செய்ய வேண்டும்என்ற உந்துதலைக் கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.