இந்தியா

என்னால் அதிகாரத்தைப் பிடிக்க முடியும் என்றால் நான் ஏன் அதிகாரத்தை ஒரு மையமாகக் குவிக்கக் கூடாது? - எதேச்சதிகார ஆளுமையின் மனோநிலையை விவரித்த ரகுராம் ராஜன்

செய்திப்பிரிவு

ராகுல் காந்தியுடன் நிகழ்த்திய வீடியோ உரையாடலில் உலகமயமான பொருளாதாரம், சந்தைகள் ஆகியவற்றின் இயக்கம் ஒரு குறிப்பிட்ட மைய அதிகார அல்லது அதிகார மையத்தை சுற்றியே இயங்கக் காரணம் என்னவென்பதை முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் விளக்கினார்.

அதாவது ஏன் அதிகாரம் ஒற்றை மையத்தில் குவிக்கப்படுகிறது என்பது குறித்து ராகுல் காந்தியிடம் அவர் கூறும்போது,

“சந்தைகள் உலகமயமாகும் போது சந்தையின் பங்கு பெறுபவர்கள் உலகம் முழுதும் ஒரே விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஒரே மாதிரியான ஒருங்கிணைப்பு அமைப்புகள் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஒரே மாதிரியான அரசு எங்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதுதான் அந்த நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது.

இது போன்ற ஒரே மாதிரியாக்குவது என்பது அதிகாரத்தை உள்நாட்டு மற்றும் தேசிய அரசிடமிருந்து பறித்து விடுகிறது. இது தவிரவும் அதிகாரத்தை ஒரு மையத்தில் குவிப்பதற்கான ஆசை ஆட்சியதிகாரத்தின் இயல்பிலேயே இருக்கிறது, அது என்னவெனில், ‘என்னால் அதிகாரத்தைப் பிடிக்க முடிகிறது என்றால் ஏன் செய்யக் கூடாது? ’ என்ற நிலையான ஆசை அதிகாரத்துக்கு உள்ளது.

குறிப்பாக அரசுகளுக்கு நிதியளிக்கிறார்கள் என்றால் சிலபல விதிமுறைகளுக்கு நீங்கள் கட்டுப்பட்டாக வேண்டும் அப்போதுதான் நிதி கிடைக்கும் என்ற நிலை உள்ளது. அதாவது நான் உனக்கு கேள்வி கேட்காமல் நிதியளிப்பதல்ல விஷயம் நீங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, உங்களுக்கும் பொருத்தமானதை முடிவெடுங்கள் என்ற நிலை” என்றார் ரகுராம் ராஜன்

இதற்கு ராகுல் காந்தி, “இது எதேச்சதிகார மாடல் ஆகும் இது தாராளமய பொருளாதார மாதிரியைக் கேள்விக்குட்படுத்துகிறது இல்லையா?” என்று கேள்வி கேட்க அதற்கு ரகுராம் ராஜன்,

“இந்த வலுவான ஆளுமை அடிப்படையிலான மைய அதிகாரம் அதுவும் உங்களுக்கு அதிகாரமற்ற ஒரு உலகில் அத்தகைய ஆளுமை தனிப்பட்ட முறையிலான செல்வாக்கை மக்களிடையே ஏற்படுத்திக் கொள்வது என்பது மக்களுக்காக அவர்கள் அக்கரை செலுத்துபவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் இதில் பிரச்சினை என்னவெனில் அந்த எதேச்சதிகார ஆளுமை ‘ஆம் மக்கள் சக்தியே நான் தான்’ என்று நினைக்கத் தொடங்கி விடுவார்கள். எனவே அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் செய்யப்பட வேண்டும் என்று நினைப்பதோடு, அதிகாரப்பரவலாகக்ப்பட்ட அமைப்புகள், தனித்துவ சுதந்திர அமைப்புகள் சுயமாக முடிவெடுக்க முடியாது, அனைத்தும் தன் மூலம்தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.

வரலாற்று ரீதியாக இப்படிப்பட்ட அதிகாரத்தைப் பார்த்தோமானால் மையம் தன் மீதே அதிக சுமையை ஏற்றி கொண்டு அசம்பாவிதமாக அதுவே சரிந்து விழுவதைத்தான் பார்த்திருக்கிறோம்.”

இவ்வாறு கூறினார் ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT