இந்தியா

ரிஷி கபூர் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் கடந்த சில வருடங்களாக லண்டனில் புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்தார்.

ரிஷி கபூரின் உடல் நிலை நேற்று மோசமடைந்ததை தொடர்ந்து மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் மரணம் அடைந்தார்.

ரிஷி கபூர் மறைவுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்திய சினிமாவுக்கு இது ஒரு மோசமான வாரம், மற்றொரு சிறந்த நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்துவிட்டார். அனைத்து வயது தரப்பிலும் ரசிகர்களை பெற்றிருந்த அற்புதமான நடிகர்.
ரிஷி கபூர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT