மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வீ்்ட்டின் பூட்டின் உடைத்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கரோனா பரிசோதனையில் பாசிஸ்டிவ் என தெரிந்ததையடுத்து, அவரை விசாரித்த நடுவர்மன்ற நீதிபதி, நீதிமன்ற ஊழியர்கள், போலீஸார் என 22-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்
மும்பையின் புறநகராந கோரிகான் பங்கூர் நகரில் கடந்த 21-ம் தேதி ஒரு வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துவிட்டு, கடையின் கதவை உடைத்து கொள்ளையடிக்கும் போது ரோந்து வந்த போலீஸார் திருடனை கையும் களவுமாகப் பிடித்தனர். அந்த நபரிடம் விசாரித்த போது மும்பையில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து விடுமுறைக்கால நடுவர்மன்ற நீதிபதியிடம் அந்த திருடனை பங்கூர் நகர போலீஸார் அழைத்துச் சென்று விசாரணைக்காக காவலில் எடுத்தனர். அந்த நபரை தானே மத்திய சிறையி்ல் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். போலீஸார் அந்த நபரை வேனில் ஏற்று சிறைக்கு கொண்டு சென்றநிலையில் சிறையில் இடமில்லாததால், ராய்காட் தலோஜா மத்திய சிறைக்கு கொண்டு செல்லுமாறு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி போலீஸார் அந்த நபரை அழைத்துக்கொண்டு ராய்காட் சிறைக்கு சென்றனர். ஆனால் சிறை அதிகாரிகள் அந்த திருடனுக்கு கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனத்தெரிவித்துவிட்டனர்
இதையடுத்து, அந்த திருடனுக்கு மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் பாஸிட்டிவ் என அறிவி்க்கப்பட்டது.இதனால் சிறைக்கும் கொண்டு ெசல்ல முடியாமல், விசாரிக்கவும் முடியாமல் போலீஸார் அந்த திருடனை மருத்துவமனையில் சேர்த்தனர்
திருடனுக்கு கரோனா பாஸிட்டிவ் இருந்ததையடுத்து பங்கூர் நகர போலீ்ஸ் நிலைய போலீஸார் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது.ஏனென்றால் கடந்த 3 நாட்களாக பல்வேறு போலீஸார் அந்த திருடனை அழைத்து நீதிபதி வீட்டுக்குக்கும், சிறைக்கும் அலைந்துள்ளனர். இறுதியாக மருத்துவ அதிகாரிகளிடம் போலீஸார் அனைத்து விவரங்களையும் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட மருத்துவ அதிகாரிகள் மாஜிஸ்திரேட், நீதிமன்ற பணியாளர்கள், திருடனுடன் சென்ற போலீஸார் என 22-க்கும் மேற்பட்டவர்களை 14 நாட்கள் வீ்ட்டில் தனிைமப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
மும்பையில் ஏற்கனே கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா வைரஸால் இரு போலீஸார் இறந்ததையடுத்து, இந்த சம்பவம் அவர்களுக்கு மேலும் அச்சத்தையும் பீதிையயும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுலம்லாமல் நாள்தோறும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீஸார், விசாரிக்கும் நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது