இந்தியா

உணவுப்பொருள் நிவாரணம்: ஏப்ரலில் 15% ஏழை குடும்பங்களுக்கு மட்டுமே ஒரு கிலோ அளவில் பருப்பு கிடைத்துள்ளது

பிரிசில்லா ஜெபராஜ்

மத்திய அரசின் கரோனா வைரஸ் நலத்திட்டங்களின் அடிப்படையிலான உணவு தானிய நிவாரணப்பொருளில் பருப்பு தலா 1 கிலோ வீதம் 15% ஏழைக்குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

19 கோடி குடும்பங்களுக்கு சுமார் 1.96 லட்சம் டன்கள் பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் ஏப்ரலில் சென்றிருக்க வேண்டும், ஆனால் 30,000 டன்கள்தான் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

மே மாதம் முதல் வாரத்தில் விநியோகம் வேகம் எடுக்கும் என்று அரசு துறை தெரிவிக்கிறது. அதாவது மில்களில் கொடுத்து சுத்திகரிக்கப்படாத பருப்பு வகைகள்தான் கையில் உள்ளன. இதனை பெரிய அளவில் சுத்தம் செய்ய பெரிய அளவில் மில்கள் இயங்க வேண்டும். அப்போதுதான் ரேஷன் கடைகளுக்கு அளிக்க முடியும்.

பிரதமர் கரீப் கல்யாண் யோஜனாவின் படி கூடுதல் ரேஷன் ஒதுக்கீடு சுமார் 1.7 லட்சம் கோடி பெறுமானமுள்ளதாகும். தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்ட பயனாளர்கள் 80 கோடி பேருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். அதே வேளையில் புரோட்டீன் தேவைகளுக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் பருப்பு ஒரு கிலோ அளிக்க வேண்டும்.

“இந்த விநியோக நடைமுறை அளவில் மிகப்பெரியது மேலும் சிக்கல் நிறைந்தது. ஒவ்வொரு கிலோ பருப்பும் சுமார் 3 முறை ட்ரக்குகளில் செல்ல வேண்டியுள்ளது, பெரிய அளவில் சரக்கு ஏற்ற, இறக்க நடவடிக்கைகள் தேவைப்படுவது, நீண்ட தூர விநியோகத்துக்கு சரக்கு ரயில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் லாரிகள் மூலம் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது” என்று நுகர்வோர் விவகார துறை தெரிவித்துள்ளது.

4 வாரங்களில் 2 லட்சம் லாரி டிரிப்கள் தேவைப்படும் அதுவும் லாக் டவுன் காலத்தில் மில்கள் பலவும் ஹாட்ஸ்பாட்களில் உள்ளதால் பெரும் சிரமங்கள் உள்ளன. லாக்டவுனாக இருப்பதால் சரக்குகளை ஏற்றி இறக்க ஆட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஏப்ரலில் தேவைப்பட்ட 1.96 லட்சம் டன்களில் 1.45 லட்சம் டன்கள் பருப்பு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு விட்டன.

SCROLL FOR NEXT