இந்தியா

கரோனாவுக்குப் பிறகு இந்தியாவுக்குக் காத்திருக்கும் அடுத்த சவால்: இந்த கோடையில் பெரிய சைஸ் வெட்டுக்கிளிகள் தாக்குதல்- உணவுக்கு நெருக்கடி?

அதுல் அனேஜா

இயற்கைப்பேரிடர் புயல், வெள்ளம் என்ற அளவில் இந்தியாவில் வருடா வருடம் இருக்கும் எப்போதாவது ஆங்காங்கே பூகம்பம் ஏற்படும், ஆனால் கரோனா எல்லாவற்றையும் கடந்த பெரிய பேரிடராக அமைந்துள்ள நிலையில் இந்திய உணவுக்கே சிக்கல் ஏற்படுத்தும் மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இந்தக் கோடையில் நிகழலாம் என்று அதிகாரிகள் தரப்பிலிருந்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறிய அதிகாரிகள் வட்டாரம், “இருமுனைப் போருக்கு” அரசு தயாராகி வருகிறது என்றார். ஒன்று நடப்பு கரோனா வைரஸ், இன்னொன்று உணவு தானியங்களை பெரிய அளவில் காலி செய்யும் பெரிய சைஸ் வெட்டுக்கிளி தாக்குதல்.

இது ஹெச்.ஓ.ஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவில் தொடங்கி வரும் வழியில் வெட்டுக்கிளி வளர்ப்புப் பகுதியிலிருந்து வெட்டுக்கிளிகள் ஏமன், பஹ்ரைன், குவைத், கத்தார், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாட்டின் வயல்வெளிகளைத் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியாணா நிலங்கள் மற்றும் கங்கை சமவெளியைத் தாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் மேல் கடக்கும் இன்னொரு வெட்டுக்கிளி கூட்டம் இந்திய தீபகற்பப் பகுதியின் பண்ணை நிலங்களைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிருந்து வங்கதேசம் செல்லும் என்று கூறப்படுகிறது.

வெட்டுக்கிளி கூட்டம் என்றால் சாதாரணம் கிடையாது ஒரு சதுர கிமீ பரப்புக்கு குறைவான பரப்பிலிருந்து பலநூறு கிமீ பரப்பளவுக்கான வெட்டுக்கிளி கூட்டம் என்பது சாதாரணம் கிடையாது என்று உணவு மற்றும் வேளாண் அமைப்பு தன் இணையதளத்தில் கூறியுள்ளது. ஒரு சதுர கிமீ பரப்பு கொண்ட வெட்டுக்கிளி கூட்டத்தில் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். ஒரே நாளில் இவை 35,000 பேர் சாப்பிடும் உணவைத் தின்று தீர்த்து விடும். அதாவது ஒரு தனிநபர் நாளொன்றுக்கு 2.3கிலோ உணவு சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால்.

ஆப்பிரிக்க-ஆசியப் பகுதிகளுக்கு இந்த வெட்டுக்கிளி தாக்குதல் என்ற பேராபத்து இருப்பதாக உணவு மற்றும் வேளாண் கழகம் கூறுகிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் வெட்டுக்கிளி வளர்ப்பு மைதானங்கள் இருக்கின்றன. சிந்து சமவெளி, பாகிஸ்தானின்பஞ்சாப் ஆகியவற்றிலும் வளர்க்கப்படுவது தெரிந்துள்ளது. ”பாகிஸ்தான் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நெருக்கடியைச் சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். இதனால் இந்தியாவில் இதன் தாக்கம் கம்மியாக இருக்க முடியும்.

வெட்டுக்கிளி தாக்குதலிலிருந்து மீள சில நாடுகள் பயன்படுத்தும் ரசாயன் ஆர்கானோபாஸ்பேட் ஆகும். இதனை வானிலிருந்து காற்றில் தெளிப்பது வழக்கம்.

இந்த வெட்டுக்கிளி தாக்குதல் ஆப்பிரிக்க-ஆசிய பகுதியின் உணவுப்பாதுகாப்பை அச்சுறுத்தலாக்கும் ஆபத்து உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு உரையாற்றிய ஐநா உலக உணவு திட்ட இயக்குநர் டேவிட் பீஸ்லி கோவிட் பெருங்கொள்ளை நோய் தற்போது பசிக்கொள்ளைநோயாக மாறப்போகிறது என்று எச்சரித்தார்.

பீஸ்லி மேலும் கூறும் போது கோவிட்-19 வைரஸ் தொற்று 13 கோடி மக்களை பட்டினிக்குத் தள்ளி விடும் என்று எச்சரித்துள்ளார், இதன் மூலம் உலகப் பட்டிணி எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்: தி இந்து ஆங்கிலம்

SCROLL FOR NEXT