ஊரடங்கு கால கட்டத்தில் பொது மக்கள் மத்தியில் செய்தித் தாள்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழு வதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் மக்களின் வாசிப்புப் பழக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக ‘அவானஸ் பீல்டு’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அண்மை யில் ஆய்வு ஒன்று மேற்கொள் ளப்பட்டது.
கடந்த 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நம்பிக்கை அதிகரிப்பு
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் இந்தக் கால கட்டத்தில், செய்தித் தாள்களில் வரும் தகவல்களையே மக்கள் அதிகப் படியாக நம்புகின்றனர். மேலும், செய்தித்தாள்கள் மீதான ஈர்ப் பும் மக்களிடையே அதிகரித் திருக்கிறது. ஊரடங்குக்கு முன்னதாக, 16 சதவீதம் பேர் மட்டுமே செய்தித்தாள்களில் ஒரு மணி நேரத்தை செலவிட்டனர். இந்த எண்ணிக்கை தற்போது 38 சதவீதமாக அதிகரித்துள் ளது.
அதேபோல், செய்தித்தாள் களில் அரை மணிநேரத்தை செலவிடும் மக்களின் எண்ணிக்கை 42 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தை செலவிடுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந் துள்ளது. இது, செய்தித் தாள்கள் மீதான நாட்டம் மக்களிடையே அதிகரித்திருப்பதையே வெளிப் படுத்துகிறது.
ஊரடங்குக்கு முன்பு, ஒரு செய்தித் தாளை ஒரே மூச்சில் வாசித்து முடிப்பவர்களின் எண் ணிக்கை 58 சதவீதம் ஆகும். ஆனால் தற்போது, அவர்களில் 42 சதவீதம் பேர், செய்தித் தாளை ஒரே நேரத்தில் வாசித்து முடிக்காமல் சிறு சிறு இடை வெளிகளில் அவற்றை படிக் கின்றனர்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.