அமெரிக்காவில் முதன்முறையாக இரண்டு பூனைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான பூனைகளை பார்த்து அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் கடந்த 5ஆம் தேதி 4 வயதான மலேசியாவின் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும், மூன்று ஆப்ரிக்க நாட்டு சிங்கங்களுக்கும் கரோனா பரவியுள்ளது.
இந்தநிலையில் மனிதர்களிடம் இருந்து இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கு வைரஸ் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதன்முறையாக இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கும், மேலும் 7 வனவிலங்குகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உரிமையாளரிடம் இருந்து ஒரு பூனைக்கு கரோனா பரவி இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதையடுத்து, தங்கள் செல்லப்பிராணிகளை வீட்டிற்கு வெளியே விட வேண்டாம் என்றும் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருததுவமனை மருத்துவர் சந்திரகாந்த் பாண்டவ் கூறியதாவது:
அமெரிக்காவில் ஏறக்குறைய 96 லட்சம் பூனைகள் உள்ள நிலையில் 2 பூனைகளுக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பூனைகளால் கரோனா பரவாது. வீட்டிற்குள் தற்போது இருப்பது மனிதர்களுக்கு மன அழுத்தத்தை தரும் சூழலில் இதுபோன்ற வீட்டு விலங்குகளே ஆறுதல். எனவே பூனைகளை கண்டு பயப்பட வேண்டாம்’’ எனக் கூறினார்.