பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடி அரசு மீது 93 சதவீதம் மக்களுக்கு நம்பிக்கை; கரோனா சிக்கலை சிறப்பாகக் கையாள்வார் என உறுதி: கருத்துக்கணிப்பில் தகவல்

ஐஏஎன்எஸ்

நாடு எதிர்கொண்டுவரும் கரோனா வைரஸ் சிக்கலை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறப்பாக கையாளும் என 93 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேசமயம், முதல்கட்ட லாக்டவுன் முடிந்துள்ள நிலையில் 2-ம் கட்ட லாக்டவுனில் மக்கள் தங்களை நன்கு தயார்படுத்தியுள்ளதாகக் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்

ஐஏஎன்எஸ், சிவோட்டர்ஸ் சேர்ந்து மார்ச் 16 முதல் ஏப்ரல் 21-ம் தேதிவரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 4,718 பேர் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பிரச்சினை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எவ்வாறு கையாள்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதில் கரோனா வைரஸ் பிரச்சினையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறப்பாகக் கையாள்வதாக 93.6 சதவீத மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 4.7 சதவீதம் பேர் மட்டுமே இதை மறுத்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பு தொடங்கப்பட்டபோது பிரதமர்மோடி அரசின் செயல்பாடுகள் மீது 75.8 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கரோனா வைரஸ் பிரச்சினையை சிறப்பாகக் கையாள்வார் என்ற நம்பி்க்கை இருந்தது. ஆனால் கருத்துக்கணிப்பு முடிவில் பிரதமர் மோடி அரசின் மீது அதிருப்தி தெரிவித்தவர்கள் கரோனா வைரஸ் செயல்பாட்டில் அரசின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவி்த்துள்ளனர் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது

SCROLL FOR NEXT