இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20471 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரததுறை தெரிவித்துள்ளதாவது:
‘‘இந்தியாவில் கரோனா தொற்று மொத்தம் 20471 பேருக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3870 நோயாளிகள் குணமடைந்திருக்கின்றனர். குணமடைவோர் விகிதம் 19.36சதவீதமாக உள்ளது.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.