இந்தியா

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி சிறப்பு சலுகை திட்டம்: மத்திய அமைச்சரவை விரைவில் அனுமதி

செய்திப்பிரிவு

நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடியில் சலுகைகள் அளிக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள் ளது. இதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. தொழில் நிறு வனங்கள் மூடப்பட்டுள்ளன. இத னால் மின் நுகர்வு குறைந்துள்ளது. தற்போதைக்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மட்டுமே நுகரப்படுகிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.

மின் நுகர்வு அதிகரிக்கும்

எதிர்வரும் மே மாதத்தில் இருந்து கோடை காலம் ஆரம்ப மாகிறது. நாட்டின் பல பகுதிகளில் 40 டிகிரி வெயில் சுட்டெரிக்கும். இதனால் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் ஏசி உள்ளிட்ட குளிர் சாதனங்களை பயன்படுத்தத் தொடங்குவர். இதனால் மின் நுகர்வு அதிகரிக்கும். இதை எவ்விதம் எதிர்கொள்வது என்ற சிக்கலில் மின் நிறுவனங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நாட்டின் மின் நுகர்வு 168 கிகா வாட்டாக இருந்தது. தற்போது மின் நுகர்வு 125 கிகா வாட்டாக குறைந்துள்ளது. இதனால் மின் கட்டண வசூல் ஐந் தில் ஒரு பகுதி அளவுக்கு சரிந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் மின் கட் டணமாக வசூலான தொகை ரூ.55 ஆயிரம் கோடி. ஆனால், தற்போது ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்குதான் வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மின் உற்பத்தி நிறுவனங்களை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க ரூ.70 ஆயிரம் கோடிக்கான சலுகைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது. மின் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது, கடன் சீரமைப்பு உள்ளிட்டவற்றோடு, அதை திருப் பிச் செலுத்த 8 ஆண்டு அவகாசம் அளிப்பது ஆகியன இந்த சலுகைத் திட்டத்தில் அடங்கும் என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின் உற்பத்தி அதி கரித்து, நுகர்வும் அதிகரிக்கும் போது நிறுவனங்கள் மின் கட் டணத்தை உயர்த்த அனுமதிப்பதும் இந்த திட்டத்தில் அடங்கும்.

SCROLL FOR NEXT