கோப்புப் படம். 
இந்தியா

கரோனா தீவிரம்: இந்தியாவில் பாதிப்பு 18 ஆயிரத்தைக் கடந்தது; 24 மணிநேரத்தில் 47 உயிரிழப்புகள்; குஜராத், மகாராஷ்டிரா நிலை மோசம்

ஐஏஎன்எஸ்

இந்தியாவில் லாக் டவுன் கடந்த 25 நாட்களாக அமலில் இருந்த போதிலும் கரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறையவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் 47 பேர்உயிரிழந்துள்ளனர். 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 601ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்துள்ளது. 3,252 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 74 ஆகவும், குஜராத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆகவும், ராஜஸ்தானில் 25 பேரும், தெலங்கானாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உயிரிழப்பு 18 பேர், தமிழகத்தில் 17 பேர், கர்நாடகா, பஞ்சாப்பில் தலா 16 பேர், மேற்கு வங்கத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5 பேரும், ஹரியாணா, கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட், பிஹாரில் தலா 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 4,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மகாராஷ்டிர மாநிலத்தில் 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 2,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 431 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 1,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 365 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 1,351 பேரும், தெலங்கானாவில் 809 பேரும், கேரளாவில் 400 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 1,936 பேர், மத்தியப் பிரதேசத்தில் 1,485 பேர், தமிழகத்தில் 1,520 பேர், ராஜஸ்தானில் 1,576 பேர், உத்தரப் பிரதேசத்தில் 1,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரவில் 722 பேரும், கர்நாடகாவில் 408 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 368 பேர், மேற்கு வங்கத்தில் 392 பேர், பஞ்சாப்பில் 245 பேர், ஹரியாணாவில் 254 பேர், பிஹாரில் 113 பேர், அசாமில் 35 பேர், உத்தரகாண்ட்டில் 46 பேர், ஒடிசாவில் 74 பேர், சண்டிகரில் 26 பேர், சத்தீஸ்கரில் 36 பேர், லடாக்கில் 18 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 16 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 39 பேர், புதுச்சேரியில் 7 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை.

மேகாலயாவில் 11 பேர், ஜார்க்கண்டில் 46 பேர், மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT