இந்தியா

லாக் டவுனால் அரிசி இல்லை: அருணாச்சலப் பிரதேசத்தில் ராஜநாகத்தை வேட்டையாடி உணவாக்கிய நபர்கள்

செய்திப்பிரிவு

ராஜநாகம் என்பது இந்தியச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட ஊர்வன வகை விலங்கினமாகும், இதனை வேட்டையாடினால் ஜாமீன் இல்லாத சிறைத்தண்டனைதான் கிடைக்கும் ஆனாலும் அருணாச்சலப் பிரதேசத்தில் ராஜநாகத்தை வேட்டையாடி அதனை தோள்மீது போட்டுக் கொண்டிருக்கும் மூவர் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இதனை உணவாக்குவதற்காக பெரிய வாழை இலையில் இந்த ராஜநாகத்தை வெட்டிச் சமைப்பதற்காக அவர்கள் ஆயத்தமாவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூவரில் ஒருவர் வீடியோவில் அரிசி இல்லாததால் லாக் டவுன் காரணமாக உணவுக்காக காட்டில் ராஜநாகத்தைக் கொன்று உணவாக்க முடிவுசெய்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது, ‘உணவு இல்லாததயடுத்து காட்டுக்குச் சென்றோம் அங்கு இதைப் பார்த்தோம், பிடித்தோம்’ என்று அவர்கள் வீடியோவில் கூறியுள்ளனர்.

ராஜநாகம் பாதுகாக்கப்பட்ட விலங்கினம் இதைப்பிடிப்பது சட்ட விரோதம், ஜாமினில்லாத சிறைத்தண்டனைதான் கிடைக்கும், அருணாச்சலப் பிரதேசத்தில் பாம்பு வகைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT