இந்தியா

கேரளாவில் பாதிப்பு சதவீதம் குறைகிறது: புதியதாக 2 பேருக்கு கரோனா;  13 பேர் குணமடைந்தனர்

பிடிஐ

கேரள மாநிலத்தில் 2 பேருக்கு புதியதாக கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் இன்று 13 பேர் குணமடைந்தததாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது வரை 270 பேர் குணமாகியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஷைலஜா கூறியதாவது:

"இன்று புதியதாக 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் கண்ணூரைச் சேர்ந்தவர். மற்றொருவர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் முறையே அபுதாபி மற்றும் துபாயிலிருந்து வந்தவர்கள்.

தற்போது வரை மாநிலத்தில் 129 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைந்தது 55,590 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 416 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்.

மாநிலம் இதுவரை 19,351 மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளது. கண்ணூரில் 48 பேருக்கும், அண்டை மாவட்டமான காசர்கோட்டில் 42 பேருக்கும், கோழிக்கோட்டில் 13 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது''.

இவ்வாறு கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT