கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலில் பெரிய எண்ணிக்கையாக சனிக்கிழமை இரவு 9 மணி வரை ஒரேநாளில் 2,154 பேருக்கு (ஒரு நாளில் அதிகம்) கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 16,365 தனிநபர்களுக்கு கரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமான ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 36 கரோனா மரணங்கள் என்று தெரிவித்துள்ளது.
ஆனால், “23 மாநிலங்களின் 47 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிய கரோனா தொற்று எதுவும் ல்லை. இதில் 12 மாநிலங்களின் 22 புதிய மாவட்டங்களும் அடங்கும், இங்கும் கடந்த 14 நாட்களில் புதிய தொற்று இல்லை” என்று சுகாதார அமைச்சக செயலர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
கரோனா மரண விகிதம் இப்போது 3.3% என்கிறது சுகாதார அமைச்சகம்.
எந்த வயதுடையோர்?
வயது குறித்த ஆய்வில் 0-45 வயதுடையோர் கரோனாவுக்கு 14.4% பலியாகியுள்ளனர். 45 வயது முதல் 60 வயது வரை உள்ளோர் 10.3%, 60-75 வயதுடையோர் 33.1%, 75 மற்றும் அதற்கும் கூடுதல் வயதுடையோர் 42.2% பலியாகியுள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மாநில சுகாதார துறை தகவல்களின் படி இதுவரை மரண எண்ணிக்கை 522 ஆக உள்ளது. 12,874 வைரஸ் தொற்று நோயாளிகள் உள்ளனர், 15,667 பாசிட்டிவ் கேஸ்கள் உள்ளன, 3,105 கேஸ்களுடன் மகாராஷ்ட்ரா முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் 1178, குஜராத் 1230, ம.பி.1206.
கேரளா செய்தது என்ன?
“100% வீட்டுக்கு வீடு ஆய்வு, காசர்கோடில் சங்கிலியை உடை என்ற திறம்பட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரம். கண்காணிப்பு ட்ரோன்கள், வீட்டில் தனிமையில் உள்ளோருக்கான ஜிபிஎஸ் தடம் காணல், மேலும் ஆக்ரோஷமான மருத்துவ பரிசோதனைகள்” இதுதான் கேரளா அடக்கிய விதம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக டெஸ்ட் செய்யப்படும் ரெம்டெசிவைர் என்ற மருந்து குறித்து ஐசிஎம்ஆர் தலைவர் கங்காகேட்கர் கூறும்போது, 68% கோவிட்-19 நோயாளிகளுக்கு ரெம்டெசிவைர் ஆக்சிஜன் தேவையை குறைத்துள்ளது, என்றார். ரெம்டெசிவைர் உண்மையில் கரோனா மருந்தாவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகத் தெரிகிறது.