இந்தியா

ஆந்திர மாநிலம் பிரிந்தாலும் ‘ரோமிங்’ கட்டணம் இல்லை

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் ஜூன் 2-ம் தேதி முதல் அதிகாரபூர்வமாக தெலங்கானா, ஆந்திரம் என இரண்டு மாநிலங்களாகப் பிரியவுள்ளது. ஆனால், மாநிலங்கள் பிரிந்தாலும் செல்போன் வாடிக்கையாளர்களிடம் ‘ரோமிங்’ கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்றால் செல்போன் ரோமிங் கட்டணம் தற்போது அமலில் உள்ளது. இதன் காரணமாக, வரும் ஜூன் 2ம் தேதி இரு மாநிலங்களாக பிரிய உள்ள ஆந்திரா-தெலங்கானா மாநிலங்களிலும் ரோமிங் கட்டணம் அமல் படுத்தபடுமா? எனும் கேள்வி ஆந்திர மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் தகவல் தொடர்புத் துறை இரு மாநில மக்களை பிரிக்கவில்லை.

டிராய் நிபந்தனையின் அடிப்படையில், டெலிகாம் துறையை பிரிக்கும் அதிகாரம் டிராய்க்கு கிடையாது. வரும் 2024-ம் ஆண்டு வரை நமது நாட்டில், எத்தனை மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், சம்மந்தப்பட்ட அந்த இரு மாநிலங்களுக்கும் சாதாரண கட்டணங்களையே வசூலிக்க வேண்டும்.

உதாரணமாக, இப்போதும் ஜார்கண்ட், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் ரோமிங் கட்டணம் கிடையாது. இதே அடிப்படையில், தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கிடையில் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

SCROLL FOR NEXT