காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

கரோனா மிகப்பெரிய சவால்தான்; அதேசமயம் ஒரு வாய்ப்பும் கூட: ராகுல் காந்தி கருத்து

பிடிஐ

கரோனா வைரஸ் மிகப்பெரிய சவால்தான், அதேசமயம் ஒரு வாய்பாக எடுத்துக்கொண்டு அனைத்து விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் நாம் ஒருங்கிணைத்து புதிய தீர்வு தேடலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்

கரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது, இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணி்கை 500யை நெருங்கிவிட்டது, 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். 2 கட்டங்களாக லாக்டவுனை நடைமுறைப்படுத்தி மக்களை சமூக விலகலைப் பின்பற்றும் வகையில் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 25-ம் தேதி முதல் இ்ம்மாதம் 14-ம் தேதி வரை முதல் கட்ட லாக்டவுனும், கடந்த 15-ம் தேதிமுதல் மே மாதம் 3-ம் தேதிவரை 2-ம் கட்ட லாக்டவுனும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஊடகங்களிடம் காணொலி மூலம் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அப்போது, “ கரோனா வைரஸை ஒழிக்க லாக்டவுன் தீர்வல்ல. அது பாஸ் பட்டன் மட்டுமே. மக்களுக்குத் தீவிரமாக பரிசோதனைகள் செய்தால் மட்டுமே ஒழிக்க முடியும்” எனத் தெரிவித்தார்

இந்த சூழலி்ல ராகுல் காந்தி ட்விட்டரில் இன்று கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,
“ கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் நமக்கு மிகப்பெரிய சவால், அதேசமயம் இது ஒரு வாய்ப்பு. இந்த நேரத்தில் நாம் நாட்டில் உள்ள அனைத்து அறிவியல் வல்லுநர்கள், பொறியாளர்கள், புள்ளிவிவர நிபுணர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த சிக்கலுக்கு புதிய வகையில் தீர்வு காண வேண்டும் “ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT