இந்தியா

கேரளாவில் கரோனா வைரஸை பரப்பிய குடும்பத்தினர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியைச் சோ்ந்தவா் தாமஸ் ஆபிரகாம் (93). இவரது மனைவி மரியம்மா (88). இருவரும் இத்தாலியில் வசித்து வரும் தங்களது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் கடந்த மாதம் இந்தியா திரும்பினர். அவா்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, கரோனா நோய்த்தொற்றால் 5 பேரும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அவா்கள் 5 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டதில், மகன், மருமகள், பேரன்மூவரும் குணமடைந்து ஏற்
கெனவே வீடு திரும்பி விட்டனர்.

ஆனால், தாமஸ் ஆபிரகாமும், மரியம்மாவும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்
பட்ட வார்டில் தங்கவைக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை பெற்றுவந்தனா். தற்போது தாமஸ், மரியம்மா ஆகியோரும் கரோனா நோய்த்தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து அவர்களது பேரன் ரிஜோ மோன்சி கூறும்போது “இத்தாலியில் வசித்து வரும் நாங்கள் 2 ஆண்டுக்கு ஒரு முறை கேரளாவுக்கு வருவோம். அந்த வகையில் இந்த முறை இங்கு வந்தபோது, எங்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனர். அதற்கான அறிகுறிகள் இருந்ததால், வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் 3 வார காலம் பல்வேறு நிகழ்ச்சிகள், பல இடங்களுக்குச் சென்றோம். அதன் பின்னர் எங்களுக்குகரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை நாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. எங்களை கவனித்துக் கொண்ட டாக்டர்கள் குழுவினருக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT