இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 23 பேர் பலியாகியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 1,007 ஆக அதிகரித்து 13 ஆயிரத்து 387ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 187 ஆக நேற்று இருந்த நிலையில், இன்று 194 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 53 ஆகவும், குஜராத்தில் நேற்று 3 பேர் பலியானதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆகவும் அதிகரித்துள்ளது.தெலங்கானாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 18ஆகவும், டெல்லியில் நேற்று 6 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 15 பேரும், ஆந்திராவில் தலா 14 பேரும் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப், கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் தலா 13 பேரும், மேற்கு வங்கத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 4 பேரும், ராஜஸ்தான், ஹரியாணா, கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்டில் 2 பேரும், பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 3,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 250 பேருக்குமேல் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 300 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 1,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 180 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 1,131 பேரும், தெலங்கானாவில் 700 பேரும், கேரளாவில் 395 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 1,120 பேரும், கர்நாடகாவில் 315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 930 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 314, மேற்கு வங்கத்தில் 255, பஞ்சாப்பில் 186, ஹரியாணாவில் 205, பிஹாரில் 80, அசாமில் 35, உத்தரகண்ட்டில் 37, ஒடிசாவில் 60, சண்டிகரில் 21, சத்தீஸ்கரில் 33, லடாக்கில் 18 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தமான் நிகோபர் தீவில் 11 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 35 பேர், புதுச்சேரி,மேகலாயாவில் தலா 7 பேர், ஜார்க்கண்டில் 28 பேர், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.