இந்தியா

ராகுல் காந்திக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்கள் கோஷம்

ஐஏஎன்எஸ், பிடிஐ

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆதரவளிக்க வந்த, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைப் பார்த்து, ‘ராகுலே திரும்பிச் செல்’ என போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நடத்தும் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவிக்க ராகுல் காந்தி சென்றார். அப்போது, ராகுலே திரும்பிச் செல் என போராட் டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் கூறும்போது, “நாங்கள் 62 நாட்களாகப் போராடி வருகிறோம். அவர் ஏன் முன்பே வரவில்லை. இதுவரை அவர் எங்கிருந்தார். எங்களின் போராட்டத்தை அரசியலாக்கவோ, அரசி யல்வாதிகளால் கைப்பற்றப் படவோ நாங்கள் அனுமதிக்க முடியாது” என்றார்.

மற்றொருவர் கூறும்போது, “மதிப்புமிக்க ஒரு போராட்டத்தை, வெறும் புகைப்பட பிரசுரத்துக்காக நடத்தப்படும் போராட்டமாக மாற்றி விடாதீர்கள்” எனக் கூறினார்.

இதனால், அவர் விரைவிலேயே அங்கிருந்து திரும்ப வேண்டிய தாயிற்று.

இதற்கிடையே பேசிய ராகுல், “ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், எந்த தேதியில் என்பதை அவர் கூற வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், முன்னதாக, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நடந்த முயற்சிக்கு கண்டனம் தெரிவித்த அவர், அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அமைச்சர் கருத்து

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் கூறும்போது, “முன்னாள் ராணுவ வீரர்கள் குறித்து அக்கறை கொண் டுள்ளோம். மிக விரைவில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இதுதொடர்பாக தனது ட்விட்டரில், “சுதந்திர தினத்தன்று, முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT