காஷ்மீரில் காவல் உதவி ஆய்வாளர் மகனுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவரோடு தொடர்பில் இருந்ததாகக் கருதப்பட்ட 22 போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 12 ஆயிரத்தைக் கடந்த நிலையில் காஷ்மீரில் 300 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காவல் உதவி ஆய்வாளரின் மகனுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரோடு தொடர்பில் இருந்த 22 பேருக்கு கோவிட் 19 நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இதில் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"அதிகாரியின் மகனுக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்ட பின்னர் போலிஸ் அதிகாரியின் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. அதிகாரியுடன் உடனடியாக தொடர்பு கொண்ட பொலிஸ் பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரியின் சோதனை முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்தாலும், எதிர்கால நடவடிக்கை நடவடிக்கை அதிகாரியின் சோதனை முடிவைப் பொறுத்தது. அதிகாரியின் முழு தொடர்பு வரலாற்றிலும் விரிவான அழைப்பு எடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை இது தீர்மானிக்கும்"
இவ்வாறு மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.