பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

ஊரடங்கு; தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க 20 கட்டுப்பாட்டு அறைகள்: மத்திய அரசு நடவடிக்கை

செய்திப்பிரிவு

கரோனா தொற்று மற்றும் அதனை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக எழும் பிரச்சினைகளால், மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் கீழ் 20 கட்டுபாட்டு அறைகளை இந்தியா முழுவதும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைத்துள்ளது.

மத்திய மண்டலத்தில் பணியிலுள்ள தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான குறைகளைக் களைவது, பல்வேறு மாநில அரசுகளோடு ஒன்றிணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்தல் போன்றவற்றை இந்த கட்டுப்பாட்டு அறைகள் மேற்கொள்ளவுள்ளன.

தொலைபேசி எண்கள், வாட்ஸ் அப், மற்றும் மின்னஞ்சல்களின் மூலம் தொழிலாளர்கள் இந்த அழைப்பு மையங்களை தொடர்பு கொள்ளலாம். சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள‌ தொழிலாளர் அமலாக்க அலுவலர்கள், உதவி தொழிலாளர் ஆணையர்கள், மண்டல தொழிலாளர் ஆணையர்கள் மற்றும் துணை தலைமை தொழிலாளர் ஆணையர்கள் ஆகியோரால் இந்த கட்டுப்பாட்டு அறைகள் நிர்வகிக்கப்படுகின்றன.

மத்திய தலைமையிட‌ தலைமை தொழிலாளர் ஆணையரால் இந்த 20 அழைப்பு மையங்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு மேற்பார்வையிடப் படுகின்றன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள‌ அதிகாரிகள், அலுவலர்களின் விவரங்கள், தொழிலாளர்கள் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

பெயர் பதவி மின்னஞ்சல் முகவரி செல்போன் எண்

வி.எம். மாணிக்கம் DY CLC(C) support-dylcchn@nic.in 9677112646

அண்ணாதுரை RLC(C) support-dylcchn@nic.in 9884576490

பி. மோகன்தாஸ் ALC(C) support-dylcchn@nic.in 9272927808

ராமானந்த் யாதவ் LEO(C) support-dylcchn@nic.in

SCROLL FOR NEXT