இந்தியா

கரோனா வைரஸை பரப்ப வருகிறீர்களா? இன்னொரு வகுப்பைச் சேர்ந்த தெரு வியாபாரிக்கு அடி உதை: டெல்லியில் அராஜக நபர் கைது 

பிடிஐ

டெல்லியில் தெருவில் காய்கறி விற்க வந்த நபரிடம் அடையாள அட்டைக் கேட்டு அவரை கெட்ட வார்த்தைகளினால் வசைபாடி, அடித்து உதைத்த நபரை போலீஸார் கைது செய்து உள்ளே வைத்தனர்.

இது தொடர்பாக 1 நிமிட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வளைய வருகிறது..

டெல்லி பத்ராபூரில் உள்ள தெரு ஒன்றில் காய்கறி விற்க வந்த நபரிடம் பெயர் என்ன என்று கேட்டுள்ளார் பிரவீண் பப்பார் என்ற கைது செய்யப்பட்ட இந்த நபர், தெருவியாபாரி தன் பெயர் முகமது சலீம் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரை கண்டபடி திட்டி, அடித்து உதைத்து தெருவுக்குள் அடையாள அட்டை இல்லாமல் இனி வந்தால் அவ்வளவுதான்... என்று மிரட்டி அனுப்பி உள்ளார் பிரவீன் பப்பர்.

இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தார். மூத்த போலீஸ் அதிகாரி ஆர்பி. மீனா என்பவர் சைபர் செல் போலீஸார் டெல்லி ரெஜிஸ்ட்ரேஷனில் மோட்டர் சைக்கில் ஓன்று அப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதன் உரிமையாளர் சுதான்ஷு என்றார்.

இந்த சுதான்ஷுதான் காய்கறி விற்பனையாளர் முகமது சலீமை அடித்து உதைத்தவர் பிரவீன் பப்பர் என்ற நபர் என்று அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து போலீஸில் சிக்கிய பப்பர், தான் அப்பகுதியில் லாக்-டவுன் விதிமுறைகளை மீறி விற்று வந்த 10க்கும் மேற்பட்ட காய்கறிக்காரர்களை விரட்டி விட்டதாகவும் சலீம் சொல்பேச்சுக் கேட்காததால் கோபமடைந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் போலீஸாரிடம் சலீம் ஏப்ரல் 10ம் தேதியன்று பப்பர் தன் மதம் பற்றி கேட்டதாகவும் முஸ்லிம் என்றவுடன் கரோனா வைரஸைப் பரப்புவதாகவும் கூறி தன்னை அடித்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பப்பர் மீது ஏகப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் போன்ற மனித குலத்துக்கே அச்சுறுத்தல் விடுக்கும் நோயிலும் மிகவும் அபத்தமாக மதத்துவேஷத்தைக் கடைப்பிடிப்பது பற்றி அப்பகுதியில் பப்பர் மீது பலரும் அருவருப்படைந்துள்ளதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT