இந்தியா

அமித் ஷா தலையீட்டினால் ஐசிஎம்ஆர் கரோனா மருத்துவப் பரிசோதனை கூடங்கள் அதிகரிப்பு

விஜய்தா சிங்

இந்தியாவில் கரோனா தொற்று பரவிவருவதன் காரணமாக வைரஸ் பரிசோதனைக் கூடங்களை அதிகரிக்க வேண்டிய தேவையிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருதியதால் அவர் தலையீட்டின் பேரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் பரிசோதனைக் கூடங்களை அதிகரித்துள்ளது.

ஜனவரி 30ம் தேதி முதல் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அனைத்து சாம்பிள்களும் தேசிய வைராலஜி கழகத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் தொற்றுக்கள் அதிகமாக அதிகமாக ஐசிஎம்ஆர் அதிக லேப்களை உருவாக்க வசதி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா, அமித் ஷா சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது இன்னும் கூடுதல் பரிசோதனைக் கூடங்கள் தேவை என்பதை வலியுறுத்தினார், இல்லையெனில் எய்ம்ஸ்-க்கு பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று அமித் ஷா கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து மார்ச் 17ம் தேதி ஐசிஎம்ஆர் கூடுதலாக 72 பரிசோதனை மையங்களைச் செயல்படுத்தியது.

கடந்த மார்ச் 20 வரை ஐசிஎம்ஆர் சுமார் 1000 சாம்பிள்களை மட்டுமே பரிசோதித்தது. அதுவும் தீவிர திடீர் சுவாசப் பிரச்சினையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை மட்டுமே பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டது. இதே நோயுள்ள ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது மார்ச் 20க்குப் பிறகுதான்.

இன்று ஐசிஎம்ஆர் நாளொன்றுக்கு 11 முதல் 13 ஆயிரம் சோதனகளை செய்தாலும் 10 லட்சம் பேருக்கு 100 பேர்கள்தான் டெஸ்ட் செய்யப்படுகின்றனர், இது உலக அளவில் மிகவும் குறைவானதாகும்.

டெஸ்ட் குறைவாக இருப்பதற்குக் காரணம் சோதனைக் கருவிகள் வெளிநாட்டிலிருந்து வரவேண்டியிருப்பதே. இது உலக சப்ளை சங்கிலியுடன் தொடர்புடையது. மேலும் பயிற்சி பெற்ற சோதனையாளர்களும் குறைவு. நிறைய தனியார் சோதனை நிலையங்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் இலவசமாக சோதனை செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் இவர்களால் டெஸ்ட்கள் நடத்த முடியவில்லை. அரசும் இலவசமாக நடத்தினால் இவர்களுக்கு எப்படி இழப்பீட்டுத் தொகையைக் கொடுப்பது என்பது பற்றி விளக்கவில்லை.

ஜனவரி 18ம் தேதி முதல் மார்ச் 23 வரை சுமார் 15 லட்சம் பயணிகள் சர்வதேச விமானநிலையங்களில் வந்திறங்கியுள்ளதாக அமைச்சரவைச் செயலர் ராஜிவ் கவ்பா மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார். மாநில அரசுகளிடம் இவ்வாறு வந்த பயணிகள் விவரங்களை அளித்தும் மாநில அரசுகள் இவர்களைத் தடம் காண்பதில் இடைவெளிகள் இருந்தன. கண்காணிப்பில் குறை இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT